2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வரி விதிப்பை தொடர்ந்து தங்கத்தின் விலை சரிவு: விற்பனையாளர்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 10 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான 10 வீதம் வரி அறவிடுவது தொடர்பான அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து, விநியோகத்தர்களிடமிருந்தான தங்க கொள்வனவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நேற்றைய தினம் தங்க வியாபார நிலைவரப்படி, 1 பவுண் 24கெரட் தங்கத்தின் விலை 44,000 ரூபாவாகவும், 22கெரட் தங்கத்தின் விலை 40,500 ஆகவும் காணப்பட்டதென அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். கடந்த மார்ச் மாதம் 24கெரட் தங்கத்தின் விலை 54,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
 
சில்லறை வியாபார அளவில், தங்கத்தின் விலை சராசரியாக 45,000 ரூபா எனும் அளவில் பேணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 22கெரட் தங்கப்பவுண் ஒன்றின் விலை அதியுச்ச விலையாக 62,000ரூபாவை எய்தியிருந்தது. கடந்த மாதம் 10வீத வரி விதிப்பை தொடர்ந்து உடனடியாக தங்கத்தின் விலை 47000ரூபாவாக உயர்ந்திருந்தது. 
 
சுற்றுலாப்பயணிகளை பொறுத்தமட்டில், மலேசியா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் தங்கத்தை குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. 
 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை ரூபாவில் 42,900 ஆக நேற்றைய தினம் பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .