2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆர்பிகோ பொசன் பக்தி கீத நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஜூலை 11 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொசன் போயா தினத்தன்று, றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் ஊழியர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து, ஆர்பிகோ நாவின்ன, மஹரகம காட்சியறையில் பொசொன் பக்தி கீத நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தனர்.
 
இந்த நிகழ்வை ஆர்பிகோ நிறுவனத்தின் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன், பிரபல இசையமைப்பாளர்களான பிமல் ராஜகருண உள்ளடங்கிய பலர் இதில் பங்குபற்றியிருந்தனர்.
 
இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலும், புத்தபெருமானின் வழிகாட்டல்களை அவர்களுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. 
 
றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் கலாநிதி சேன யத்தெஹிகே மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .