
பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் (Pegasus Reef Hotel) அண்மையில் தனது புதிதாக புதுப்பிக்கப்பட்ட போல் றூமை (Ballroom) திறந்து வைத்துள்ளது. இதன்மூலம் எப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற தனது வாடிக்கையாளர் தளத்திற்கு வழங்கும் உற்பத்திகள், சேவைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது.
ரூபா 60 மில்லியன் பெறுமதியான இந்தப் புதுப்பித்தல் செயற்றிட்டத்தை நிறைவு செய்ய கிட்டத்தட்ட 03 மாதங்கள் எடுத்துள்ளன. கண்ணைக் கவரும் புதிய துணி போன்ற சுவர் ஒப்பனைத்தாள், சிவப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு வர்ணம் கலந்த புதிய தரைவிரிப்பு, மிக முன்னேற்றகரமான ஒளியமைப்பு முறைமை, விஷேடமாக வடிவமைக்கப்பட்;ட நவீன சரவிளக்குப் பொருத்துதல் ஆகியவற்றின் மூலம் மண்டபத்தின் அழகுணர்ச்சியை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இப் புதுப்பித்தல் பணிகளுள் உள்ளடங்குகின்றன. இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலி-உட்புகாத பிரிக்கும் கட்டமைப்பானது 'போல் றூமை' இரு பகுதிகளாக பிரித்துப் பயன்படுத்துவதற்கு வசதி அளிப்பதன் ஊடாக ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகின்றது.
அனுபவமுள்ள ஹோட்டல் துறை நிபுணரும் பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் நிறுவனத்தின் பணிப்பாளருமான பெடி விதான கூறுகையில், 'பேராவலுள்ள இந்த புதுப்பிக்கும் செயற்றிட்டமானது, ஹோட்டல் முன்னேறிச் செல்வதற்கு வழிவகுக்கின்றது. கொழும்பு வடக்கைச் சேர்ந்த எமது பெருமளவான வாடிக்கையாளர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது மாத்திரமன்றி, அதற்கு அருகிலமைந்துள்ள இடங்களிற்கும் இவ்வரவேற்பு பரவிய வண்ணமுள்ளது, 1200 சதுர மீற்றர் பரப்பளவான போல் றூமில் 800 பேரை மதுபான விருந்துபசாரத்திற்காகவும், சுமார் 600 பேரை திருமண நிகழ்விற்காகவும் அமர வைக்க முடியும். இதனை ஒரு திரையரங்கு வடிவிலும், வகுப்பறை வடிவிலும், பணிப்பாளர்கள் அறை வடிவிலும் கூட தேவையான போது பயன்படுத்த முடியும். ஒலி-உட்புகாத பிரிக்கும் தடுப்புச் சுவர் கட்டமைப்பானது புதுப்பிக்கப்பட்ட போல் றூமை 'ரன்தம்பரா' மற்றும் 'சோபரா' என்ற பெயர்களைக் கொண்ட இரு தனித்தனியான அறைகளாக பிரித்து பயன்படுத்துவதற்கு வசதியளிக்கின்றது. இதன்வாயிலாக ஒட்டுமொத்தமான உற்பத்தியாற்றல் அதிகரிக்கச் செய்யப்படுகின்றது' என்றார்.
'மிக ஆரோக்கியமான முறையில் ஒன்றாகக் கலந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களும் மற்றும் வணிக, ஓய்வுகால சுற்றுலா மற்றும் இடைத்தங்கல் துறைகளை பிரதிநிதித்துவம் செய்பவர்களுமே எமது இலக்கு வாடிக்கையாளர்களாவர். ஒரு தலைநகர ஹோட்டலையும் தாண்டிய சௌகரியங்களை நாம் வழங்குகின்றோம். அதாவது – ஒரு பொழுதுபோக்கிடம் போன்ற சுற்றுப்புறச் சூழலைக் கொண்டமைந்துள்ள இந்த ஹோட்டல் மனதையும் ஆத்மாவையும் ஆற்றுப்படுத்துகின்றது. ஏக காலத்தில் பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது பல்வகைப்பட்ட MICE நிகழ்ச்சிகள், திருமண வைபவங்கள் மற்றும் தேனிலவு செல்பவர்களுக்கான பிரபலமிக்க இடமாகவும் திகழ்கின்றது என்று' விதான மேலும் குறிப்பிட்டார்.
பூங்கா மற்றும் கடலின் காட்சிப்புலங்களை ஒருங்கே வழங்கும் பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது மைய காற்றுச் சீராக்கல் வசதி, தொலைக்காட்சி, தொலைபேசி, மினி-மதுபானசாலை, கம்பித் தொடர்பற்ற (Wi-Fi) இணைய வசதி, சுடுநீர் வசதியையும் குளிர்ந்த நீர் வசதியையும் கொண்ட இணைந்த குளியலறை, பிரத்தியேகமான பல்கேனி ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்திலமைந்த தரமிக்கதும் போதுமான இடவசதியை உடையதுமான 140 அறைகளை கொண்டியங்குகின்றது.
திறந்தவெளி உணவகத்தில் ஒரேநேரத்தில் 200 பேர் அமர முடியும். அத்துடன் பேஸ்ட்ரி நிலையம், மாணிக்கக் கற்கள் உள்ளடங்கலாக ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கட்டிடத் தொகுதி, 24 மணிநேர அறைக் கவனிப்பு சேவை, உள்ளக பயணக் கருமபீடம், ஆடை வெளுப்பு சேவை, பாதுகாப்பு பெட்டகங்கள், பயணப் பொதிகளை வைத்துவிட்டுச் செல்லக் கூடிய வசதி மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று வசதி போன்றனவும் இங்கு காணப்படுகின்றன.
பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் அதனது பூங்காவை மையமாகக் கொண்ட திருமண நிகழ்வுகள், அதனது கடலோர விருந்துபசாரங்கள், நடந்து செல்லத்தக்க பரந்த வடக்குப்பக்க புல்வெளி போன்றவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றுள்ளது.
இந்த ஹோட்டலானது விளையாட்டுக்கள் மற்றும் ஓய்வுகால ஏற்பாடுகள் தொடர்பான வசதிகளையும் வழங்குகின்றது. இங்கு மிகப் பிரமாண்டமான ஒரு நீச்சல் தடாகம், ஸ்குவாஷ், பூப்பந்தாட்டம், ரெனிஸ், கடலோர கரப்பந்தாட்டம், டேபள் டென்னிஸ், உள்ளக விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுசார் வசதிகள் உள்ளடங்கலாக அனைத்து வசதிகளும் கொண்ட உடற்பயிற்சிக் கூடமும் உள்ளது. இதற்கு மேலதிகமாக நீச்சல்குளத்தருகே மதுபானசாலை, சிறு குளம் போன்றவற்றுடன் விஷேட வெளிப்புற நிகழ்வுகளுக்கான தளமேடையையும் இந்த ஹோட்டல் கொண்டிருக்கின்றது.
கழக உறுப்பினர்கள் விஷேட கட்டணப் பொதிகளில் மேலும் பொழுதுபோக்கு வசதிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கொழும்பு வடக்குக் கடற்கரையோரமாகவும் அதேநேரம் துறைமுகத்தை அங்கிருந்து பார்க்கும் வகையிலும் அமையப் பெற்றிருக்கின்ற பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் என்பது, அழகு, மன அமைதிக்கான இடமாகவும் அதேபோன்று சூரியன் முத்தமிடுகின்ற இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றது. கொழும்பு தலைநகரில் இருந்து 08 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பைகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது, கொழும்பு தலைநகர் பகுதி மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பவற்றுக்கு இடைப்பட்ட ஹெந்தல - வத்தளை பிரதேசத்தில் உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம், எதிலும் இரண்டாம் தரமில்லாத சௌகரிய தெரிவுகளை இது தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.