2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கையடக்க தொலைபேசி மூலம் வாகன வரிப்பணம் செலுத்த வாய்ப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 17 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வாகன உரிமையாளர்களுக்கு தமது கையடக்க தொலைபேசி மூலம் வாகன வரிப்பணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பு இந்த மாத இறுதியிலிருந்து ஏற்படுத்தப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின் துரிதமான சேவைகளை வழங்கும் நடவடிக்கைக்கு அமைவாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கையின் தகவல் தொடர்பாடல் முகவர் அமைப்பு அறிவித்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து இந்த சேவை, வட மேல் மாகாணத்துக்கும், கேகாலை மாவட்டத்துக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. டயலொக் ஆக்சியாடா நிறுவனத்தின் மொபைல் கொடுப்பனவு முறையான eZ கொடுப்பனவு முறைக்கமைய இந்த கொடுப்பனவு முறை இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .