2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சேர்டிஸ் லங்கா நிறுவனத்தின் கிளை அலுவலகம் யாழில் திறப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சொரூபன்


சேர்டிஸ் லங்கா நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை இன்று புதன்கிழமை விக்டோறியா வீதியில் அமைந்துள்ள கடடிடத்தில் வைபவ ரீதீயாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஐh அலுவலகதினை திறந்துவைத்தார்.

இந்நிறுவனமானது தனது சேவைகளான பாதுகாப்புச் சேவை, தொழில் நுட்பம் மற்றும் ஆலோசனைச் சேவை, கூரியர் சேவை, வீட்டுத் தாதியச் சேவை என தனது கிளையின் செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன்சிகேரா, யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்ரி, சேர்டிஸ் லங்கா குழுத் தலைவர் சங்க விஜயசிங்க, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் கெற்றிச் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .