2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தங்கத்தின் விலை சரிவு வங்கிகளுக்கு சவாலானது

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளமையால் வங்கிகளை பொறுத்தமட்டில் செயற்பாட்டு திறன் குறைந்த கடன்களான நகை அடகு வர்த்தகங்களின் மூலம் அதிகளவு சவாலான நிலைகளை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்டான்டர்ட் அன்ட் புவர் எதிர்வுகூறியுள்ளது.
 
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு எதிர்வரும் மாதங்களில் பதிவாகாவிடின், அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்பதில் வாடிக்கையாளர்கள் அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தமாட்டார்கள் எனவும் தனது ஆய்வு அறிக்கையில் ஸ்டான்டர்ட் அன்ட் புவர் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கையில் காணப்படும் வங்கியியல் நிதி விதிமுறைகளுக்கு அமைய, தங்க நகைகளை அடகு முறையில், எந்தவொரு வாடிக்கையாளரும் குறித்த காலப்பகுதியினுள் தமது அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க தவறும் பட்சத்தில் அது குறித்து இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அறிவிக்கப்பட வேண்டியதில்லை எனும் நிலை காணப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .