2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

செப்டெம்பர் மாதத்தில் ஆறாவது தெற்காசிய பொருளாதார மாநாடு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறாவது தெற்காசிய பொருளாதார மாநாடு செப்டெம்பர் மாதத்தின் முதல் வார பகுதியில் கொழும்பில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாட்டில், தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்கள் குறித்து ஆராயும் வகையில் அமைந்துள்ளது. 
 
இந்த மாநாட்டை இலங்கையின் IPS மையம் ஏற்பாடு செய்கிறது. செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் தெற்காசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த சுமார் 120க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .