2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதிய பொதியிடல், வர்த்தக நாம கொள்கைகளுடன் 'பரகா' சந்தையில் மீள் அறிமுகம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான, பயோ எக்ஸ்ட்ராக்ட்ஸ் (பிரைவேற்) லிமிடெட், புதிய வர்த்தக நாம இலச்சினை, பொதியிடல் மற்றும் வர்த்தக நாம கொள்கை போன்றவற்றை தனது ஆயுர்வேத சுகாதாரநல தயாரிப்பான 'பரகா' தயாரிப்புகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய கண்கவர் இலச்சினையில் கருஞ்சீரகத்தை உற்பத்தி செய்யும் பூவை குறிப்பதாக அமைந்துள்ளது. பல நாடுகளில் மருத்துவ ரீதியில் அனுகூலங்களை வழங்கும் இயற்கை மூலிகையாக கருஞ்சீரகம் அமைந்துள்ளது.

இந்த மீள் அறிமுகம் குறித்து பயோ எக்ஸ்ட்ராக்ட்ஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிசா பஹார்தீன் கருத்து தெரிவிக்கையில், '20ஆண்டுகளுக்கு மேலான வளமான வரலாற்றைக் கொண்டுள்ள எமது தயாரிப்புகளை, இன்றை காலகட்டத்தின் தேவையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பதற்கு அமைவாக அதிகளவான வாடிக்கையாளர்களை இலகுவாக சென்றடையக்கூடிய விதத்தில் வெளிப்படையான தொடர்பாடல் கொள்கைகளுடன் அமைந்த மீளமைப்பு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருந்தோம்.

எமது நோக்கம், எமது வாடிக்கையாளர்கள் தமது சுகாதார தேவைகளுக்கு நாளாந்தம் பயன்படுத்தும் வர்த்தக நாமமாக திகழ்வதன் மூலம் சுகாதார பராமரிப்பு துறையில் முன்னணி ஆயுர்வேத தயாரிப்பாக திகழ்வது என்பது அமைந்துள்ளது.

ஒரு வர்த்தக நாமம் எனும் வகையில் எமது பிரதிபலிப்பை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு மனிதரிடையேயும் பரகா பாவனையை சென்றடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மை மற்றும் சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி பெடி வீரசேகர கருத்து தெரிவிக்கையில், 'பரகா என்பது ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக நாளாந்தம் உள்ளெடுக்கக்கூடிய மூலிகை தயாரிப்பாக அமைந்துள்ளது. புதிய வர்த்தக நாம இலச்சினை மிகவும் எளிமையான விதத்தில் அமைந்துள்ளதுடன், இந்த இலச

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .