2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சர்வதேச போட்டிகளில் வெள்ளி விருதுகளை வென்றுள்ள செலான் வங்கியின் ஆண்டறிக்கை

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 01 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியின் 2012 இற்கான 'It Works' ('அது செயலாற்றுகின்றது') எனும் ஆண்டறிக்கையானது, அண்மையில் நடைபெற்று முடிந்த 'யுசுஊ சர்வதேச விருதுகள்' மற்றும் அமெரிக்க தொலைத்தொடர்பாடல் தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் (LACP) 'தூரநோக்கு விருதுகள்' ஆகிய இரு நிகழ்வுகளிலும் தலா ஒவ்வொரு வெள்ளி விருதை வென்றெடுத்துள்ளது. 
 
அண்மையில் இடம்பெற்ற ARC சர்வதேச விருது வழங்கல் நிகழ்வின் போது வங்கியியல் துறையில் 'அச்சிடல் மற்றும் உற்பத்திக்கான' வெள்ளி விருது ஒன்றை செலான் வங்கியின் 2012 ஆண்டறிக்கை பெற்றுக் கொண்டது. உலகளவில் நடாத்தப்படுகின்ற மிக பிரமாண்டமான ஆண்டறிக்கை விருது வழங்கல் நிகழ்வுகளுள் ஒன்றாக 'ARC சர்வதேச விருதுகள்' திகழ்கின்றது. இவ்வருடத்தில் முன்னைய சாதனையை முறியடிக்கும் விதத்தில் 34 நாடுகளில் இருந்து 2,260 நுழைவுகள் (விண்ணப்பங்கள்) ARC விருது வழங்கலுக்கு கிடைக்கப் பெற்றிருந்தன. இவ்விருது வழங்கல் திட்டமானது வருடாந்த அறிக்கைகளுக்கான 'அகெடமி விருதுகள்' என்றும் பிரபலமாக அழைக்கப்படுகின்றது. 
 
அதேவேளை, அமெரிக்க தொலைத்தொடர்பாடல் தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் (LACP) 'தூரநோக்கு விருது' வழங்கலின் போதும் வங்கியின் 2012 ஆண்டறிக்கை ஒரு வெள்ளி விருதை தட்டிச் சென்றுள்ளது. 'வங்கியியல் - வணிகம்சார்' பிரிவிலேயே இந்த வெள்ளி விருது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டுக்கான 'LACP தூரநோக்கு விருதுகள்' போட்டிக்காக இம்முறை உலகம் முழுவதிலும் இருந்து 6,000இற்கும் அதிகமான நுழைவுகள் அனுப்பப்பட்டிருந்தன.  
 
2009ஆம் ஆண்டு தொடக்கம் செலான் வங்கி தொடர்ச்சியாக அடைந்து கொண்டுள்ள வெற்றிகளுடன் ஒருங்கிணைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உபாயங்கள் மற்றும் செயற்பாட்டு திட்டங்களை தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டும் அடிப்படையில், 'It Works' என தலைப்பிடப்பட்ட செலான் வங்கியின் மேற்படி 2012 ஆண்டறிக்கை காணப்படுகின்றது. 
 
மிக அண்மைக்காலத்தில் (அதாவது 2009 – Case Study, 2010 –The Business Case, 2011 – North Bound மற்றும் 2012 – it Works போன்ற) செலான் வங்கியின் ஆண்டறிக்கைகள், கதை வடிவில் அறிக்கையிடும் பாணிக்காக வாசகர்களிடையே தனிச் சிறப்புமிக்க அடையாளம் ஒன்றை தன்னளவில் பெற்றுள்ள அதேநேரம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்; தொடர்ச்சியான பல வெற்றிகளையும் அனுபவித்துள்ளன. 
 
செலான் வங்கியின் பிரதம நிதியியல் அதிகாரியான ரமேஷ் ஜயசேகர இவ் விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 'ARC சர்வதேச விருதுகள் மற்றும் LACP தூரநோக்கு விருதுகள் ஆகிய இரண்டிலும் வெள்ளி விருதுகளை வென்றெடுத்துள்ளமையானது, தனது பங்குதாரர்களுக்காக பொறுப்புணர்வுமிக்க விதத்தில் அறிக்கையிடும் விடயத்தில் செலான் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு மிகவும் உறுதியான ஒரு அத்தாட்சியாகவும் அங்கீகாரமாகவும் அமைகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .