2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


வாரத்தின் முதல் இரண்டு தினங்களிலும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்த போதிலும், புதன்கிழமை பங்குச்சந்தை நடவடிக்கைகள் சடுதியான அதிகரிப்பு அவதானிக்க முடிந்தது.

அரச வங்கியின் பிணையங்கள் விற்பனையின் தாக்கம் கொழும்பு பங்குச்சந்தையிலும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகிய உயர்வான பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது கொழும்பு பங்குச்சந்தை பதிவு செய்திருந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,749.46 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3176.74 ஆகவும் அமைந்திருந்தன.    

செப்டெம்பர் 09ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,494,289,658 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 22,105 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 25,014 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,091 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் என்.வி றிசோர்சஸ் (உரிமைப்பங்குகள்), ப்ளு டயமண்ட்ஸ், சிட்ரஸ் லெய்ஷர் (உரிமைப்பங்குகள்), டச்வுட் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஆசியா சியாகா, டுனாமிஸ் கெப்பிட்டல், ஜிஎஸ் ஃபினான்ஸ், அஸ்கொட் ஹோல்டிங்ஸ் மற்றும் செலின்சிங் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,200 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 134.09 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 212.80 ஆக காணப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .