2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வட, கிழக்கு பகுதியில் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தாஜ் ஹோட்டல்ஸ் தீர்மானம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 16 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாசிக்குடா மற்றும் திருகோணமலை பகுதிகளில் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாஜ் ஹோட்டல்ஸ் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக 300 அறைகளை கொண்ட தொகுதியை கையகப்படுத்தி பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தாஜ் ஹோட்டல்ஸ் அறிவித்துள்ளது. 
 
இந்த பகுதியில் பெருமளவான ஹோட்டல்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், புதிதாக ஹோட்டல் ஒன்றை தாம் நிர்மாணிக்க ஆர்வம் கொள்ளவில்லை எனவும், ஏற்கனவே காணப்படும் ஹோட்டல்களை பொறுப்பேற்று பங்காண்மை அடிப்படையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஹோட்டலின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ரோஹித் கோஷியா தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதி உதவிகளை ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்றவற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளது. 
 
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாஜ் பிரசன்னத்தை கொண்டுள்ளதுடன், 662 ஹோட்டல் அறைகளை பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .