2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்குகளின் வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டுகோள்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலவு நிறைந்த முறிகளை வெளிநாட்டு நாணயங்களில் வழங்கி வருமானமீட்டுவதை விட, வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்குகளின் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு பொருளாதார வல்லுநரும், பங்குமுகவருமான ஆர்.எம்.பி.சேனாநாயக்க அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
தேசிய சேமிப்பு வங்கியின் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முறிகளை வழங்கியிருந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தேசிய சேமிப்பு வங்கியை பொறுத்தமட்டில் இதுபோன்றதொரு வெளிநாட்டு நாணயத்தில் முறிகளை வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைவாக இது முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
 
வெளிநாட்டு நாணயத்தை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்குகளின் வட்டி வீதங்களை அதிகரிப்பதன் மூலம் இலகுவாக அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .