2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முதலீட்டுகள் தொடர்பான அறிவூட்டல் கருத்தரங்கு வவுனியாவில் ஏற்பாடு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலீட்டு ஆர்வலர்கள், அரச மற்றும் கம்பனிகளின் பிணையங்களில் முதலீட்டினை மேற்கொள்ளத் தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய கருத்தரங்கு ஒன்று கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் யாழப்பாணக்கிளையின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28, 29ஆம் திகதிகள் மற்றும் ஒக்டோபர் 5, 6ஆம் திகதிகள் ஆகிய வார இறுதிநாட்களில் காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை வவுனியா ரோயல் கார்டின் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நாம் மாதாந்த வருமானத்தின் சிறு பகுதியளவினை கிரமமாக சேமிக்கின்றோம். எமது எதிர்காலத் தேவைகள் கருதி சேமிக்கும் எமது பணத்தின் பெறுமதி பணவீக்கத்தால் மதிப்பிழந்து செல்கின்றது. எனவே நாம் எமது சேமிப்புக்களை பன்முகப்படுத்திய முதலீடுகளாக மாற்றி முதலீடுசெய்தால், சேமிப்பின் (பணத்தின்) பெறுமதியினை அதாவது அதன் கொள்வனவு சக்தியினை பாதுகாத்துக் கொள்ள அல்லது பெருக்கிக் கொள்ள முடியும்.
 
இக்கருத்தரங்கில் முதலீடுகளுக்கான அறிமுகம், நிதிக்கூற்றுக்களை விளங்கிக் கொள்ளுதல், பங்குகளைத் தெரிவு செய்தல், நம்பிக்கை அலகுகள் மற்றும் இணையத்தள முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற தலைப்புகளில் துறைசார் வல்லுநர்களினால் கருத்துரைகள் வழங்கப்படும். ஆர்வமுடைய அனைவரும் பங்குபற்றி பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முற்பதிவுகளுக்கும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள 0777-822014, 02122-21455 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .