
நுகர்வோர் சுகாதார பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் முன்னோடியான ஸ்மித்கிளைன் பீச்சம்(பிரைவட்) நிறுவனமானது, தனது ஊட்டச்சத்து பானமான ஹோர்லிக்ஸ் தயாரிப்பினை (6-16 வயதுடைய குழந்தைகளுக்காக) சந்தையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. 23 முக்கிய ஊட்டச்சத்துக்களினால் செறிவூட்டப்பட்டுள்ள ஹோர்லிக்ஸ் ஆனது, வளரும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டினை நிறைவு செய்கிறது. புதிய ஹோர்லிக்ஸ் ஆனது, கவர்ச்சிகரமான பொதியிடலுடனும், புதிய சுவையுடனும் இலங்கையில் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதியதும், மேம்படுத்தப்பட்டதுமான ஹோர்லிக்ஸில் அடங்கியுள்ள 23 முக்கிய ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியமான எலும்புகள், தசைகள், வலுவான நோயெதிர்ப்பு சக்தி, ஆற்றல் மற்றும் ஆரோக்கியமான குருதி போன்றவற்றிற்கு போசாக்கினை வழங்குகிறது. ஹோர்லிக்ஸ் ஆனது, குழந்தைகளின் வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தும் அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்ற முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
ஹோர்லிக்ஸ் தயாரிப்பின் மீள் அறிமுகம் குறித்து இலங்கை ஸ்மித்கிளைன் பீச்சம்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ரவிந்திர டி கூங்கே கருத்து தெரிவிக்கையில், 'அயடின், விற்றமின் ஏ, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் துத்தநாகக் குறைபாடுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில நுண் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகும். ஆகவே, போதியளவான நுண் ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளிற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். புதிய ஹோர்லிக்ஸ் அறிமுகத்தின் மூலம், ஒரு ஆரோக்கிய பானம் மூலம் நுண் ஊட்டச்சத்து இடைவெளிகளை பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்பினை அறிமுகப்படுத்த முயற்சித்தோம்' என தெரிவித்தார்.
ஸ்மித்கிளைன் பீச்சம்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரிவு முகாமையாளர் லோரன் சாங் கருத்து தெரிவிக்கையில், 'நமது நாட்டிலுள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தையின் உணவுகள், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் அவர்களிற்கு புரோட்டீன், காபோவைதரேற்று மற்றும் கொழுப்பு ஆகியன சரியான அளவில் கிடைக்கிறதா என்பது தொடர்பாக அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் பழங்கள் மற்றும் காய்கறிகளை குழந்தைகள் அதிகம் உண்ண விரும்பாமையால் நாளாந்தம் அவர்களிற்கு கிடைக்க வேண்டிய முக்கிய விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் உடலிற்கு கிடைக்காமல் போகின்றது. இதன் காரணமாக நுண் போசணை குறைபாடு ஏற்படுகிறது. இது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து இடைவெளியை ஏற்படுத்துகிறது. எனவே, இந் நிறுவனத்தின் மூலம் முழு வளர்ச்சிக்கும் அவசியமான நுண் ஊட்டச்சத்துக்கள், அதன் நன்மைகள் மற்றும் நுண் போசாக்கு குறைபாடுகள் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன' என்றார்.
புதிய மேம்படுத்தப்பட்ட ஹோர்லிக்ஸில் அடங்கியுள்ள இரும்புச்சத்து, விற்றமின் ஏ, அயடின், துத்தநாகம், ஃபோலிக் அமிலம், மாங்னீசியம், selenium மற்றும் செப்பு ஆகிய 23 முக்கிய ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து இடைவெளிகளை இல்லாதொழிக்க உதவுகிறது. மேம்படுத்தப்பட்டதும், கவர்ச்சிகரமான பொதியிடலுடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹோர்லிக்ஸ், தற்போது நவீன வர்த்தக நிலையங்கள், பொது வர்த்தக மையங்கள், பார்மசிகள் மற்றும் இதர விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.