2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆடைத்தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ப்ரிவிலேஜ் அட்டை அறிமுகம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி நுகர்வோர் வர்த்தக நாமங்கள் மற்றும் விற்பனையகங்கள் இணைந்து ஆடைத்தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ப்ரிவிலேஜ் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. ஆடைத்தொழில் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி இந்த விசேட அட்டை ஜாஃவ் (JAAF) அமைப்பின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
ஆடைத் தொழில் துறையை சேர்ந்த சகல ஊழியர்களுக்கும் அனுகூலம் சேர்க்கும் வகையில், அவர்களுக்கு அவசியமான பல பொருட்களில் விலைக்குறைப்பையும், விலைத்தள்ளுபடிகளையும் வழங்கும் வகையில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்துக்கு |ரன்சலு பிரணாம' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து ஜாஃவ் (JAAF) அமைப்பின் பொதுச் செயலாளர் டூலி குரே கருதது தெரிவிக்கையில்;, 'ஆடைத் தொழில் துறைக்கு ஊழியர்கள் வழங்கி வரும் பங்களிப்பை ஊக்குவித்து அவர்களை கௌரவிக்கும் முகமாக நாம் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளோம். இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் ஒரு துறையாக இது அமைந்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் இந்த துறையின் ஊழியர்களுக்கு புதுவிதமான ஒரு சேவையை நாம் வழங்க தீர்மானித்த போது, இந்த திட்டம் குறித்த சிந்தனை உதித்தது' என்றார்.
 
இலங்கையின் ஆடைத்தொழில் துறையை மேற்பார்வை செய்யும் அமைச்சான தொழில்துறை மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் அங்கீகாரத்தை இந்த செயற்திட்டம் பெற்றுள்ளது.
 
இந்த விசேட சேவைகள் நாடு முழுவதும் வழங்கப்படவுள்ளதுடன், ஆடைத் தொழில் துறையில் பணியாற்றும் சகல ஊழியரும் பிரணாம அட்டைக்கு உரித்துடையவராவார். இந்த அட்டையை அவர்கள் பங்காண்மை விற்பனையகங்களில் சமர்ப்பித்து விலை கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். தனியார் துறையில் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான கார்கில்ஸ் ஃபுட் சிட்டி, தேசிய தொலைத்தொடர்பாடல்கள் சேவைகளை வழங்கும் ஸ்ரீலங்கா ரெலிகொம், தேசிய மொபைல் தொலைத்தொடர்பாடல்கள் சேவைகளை வழங்கும் மொபிடெல் ஆகியவற்றிடமிருந்து அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும். 
 
மேலும் அபான்ஸ், சிங்கர், டிஎஸ்ஐ, யுனிலீவர், அரச வியாபார கூட்டுத்தாபனம், மெட்ரோபொலிடன், செலிங்கோ இன்சூரன்ஸ், சம்பத் வங்கி, ஹட்ச், நுறளை பெரிபேரல்ஸ், ஹமீடியா, அன்டன் குழுமம் ஆகிய நிறுவன்ஙகள் ஆடைத்தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த பிரணாம அட்டையினூடாக சலுகை விலையில் சேவைகளை வழங்க தமது உடன்படிக்கையை தெரிவித்து  ஜாஃவ் (JAAF) அமைப்பு மற்றும் CH17 ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். இந்த வலையமைப்பில் மேலும் பல புதிய நிறுவனங்களை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன. 
 
இந்த செயற்திட்டத்தின் தொழில்நுட்ப பங்காளராக மொபிடெல் நியமிக்கப்பட்டுள்ளது. NFC தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதுடன், மொபிடெல் CH17 உடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் இந்த செயற்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லவுள்ளது.
 
இந்த பிரணாம அட்டை அதிகளவு பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த பிரணாம அட்டை திட்டத்தின் வடிவமைப்பாளரான CH17 நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுமர் பிரீனா கருத்து தெரிவிக்கையில், 'இந்த அட்டையை வைத்திருப்பவர், இரட்டிப்பு அனுகூலங்கை பெறுவார், குறிப்பிடப்பட்ட அனைத்து விற்பனையகங்களிலும் இந்த அட்டையை உபயோகித்து பயன்பெற முடியும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .