2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்கத்தின் விலை மேலும் சரிவடையும்: ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தகவல்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவினால் மேலதிக நாணய அச்சிடும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் முதலீட்டு கேள்விகள் வலுக்குன்றியுள்ளமை போன்ற நிலைகளின் காரணமாக தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1200 டொலர்களை விட குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்வு கூறியுள்ளது.
 
தங்கத்தின் கொள்வனவில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், நிதிசார் ஆவணமாக தங்கம் பயன்படுத்தப்படுவதுடன், பணவீக்கத்துக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒரு மூலமாகவும் தங்கம் அமைந்துள்ளது. 
 
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடையும் பட்சத்தில், இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அதிகளவு இழப்புகளை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு மாற்று வழிமுறைகளை நாட வேண்டும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .