2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஈபிள் கோபுரம் லயனல் வென்ற் கலைக்கூடத்திற்கு வருகின்றது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே நிலையமானது, ஊடகத்துறை ஆளுமையான குமார் டி சில்வாவின் 'Nostalgie03 – the Eiffel Tower Unplugged' எனும் கறுப்பு-வெள்ளை புகைப்பட  கண்காட்சியினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இக் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ற் கலைக்கூடத்தில் நடைபெறவுள்ளது.
 
2013 ஒக்டோபர் 05ஆம் திகதி சனிக்கிழமையும், 06ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 7.00 மணி வரையும் பொதுமக்கள் பார்வையிடக் கூடிய விதத்தில் இக்கண்காட்சி திறந்து விடப்பட்டிருக்கும். இந் நிகழ்வுக்கு 'Langers' (வெளிநாட்டு மொழிகளுக்கான நூல்) மற்றும் 'மாலு மாலு ரிசோர்ட் அன்ட் ஸ்பா' தங்குவிடுதி ஆகியன கூட்டாக அனுசரணை வழங்குகின்ற அதேவேளை, நிகழ்ச்சிப் பங்காளியாக Lou Ching Wong கலையகமும் வானொலிப் பங்காளியாக YES FM உம் இணைந்து கொண்டுள்ளன.  
 
இந்த மூன்றாவது வருடாந்த கண்காட்சியானது குமார் டி சில்வாவின் முன்னைய இரு கண்காட்சிகளிலிருந்தும் வேறுபடுவதுடன், பரிஸ் நகரின் பழம்பெரும் வயது முதிர்ந்த பெண்ணை தனியொரு தொனிப்பொருளாக கொண்டமைந்துள்ளது. 'ஈபிள் கோபுரம் என்பது புதியதொன்றல்ல. மாறாக, கடந்த 124 வருட காலமாக அவ்விடத்தில் நிற்கும் அதேவேளை இன்னும் தொடர்ச்சியாக அங்கு கம்பீரமாக காட்சிதரும். ஒரு மாறுதலுக்காக, மாறிக் கொண்டேயிருக்கின்ற பரிஸ் நகரத்தின் வர்ண ஒளியின் பின்புலத்தில் ஈபிள் கோபுரத்தை சூழ்ந்து விரிந்து கிடக்கும் நாளாந்த வாழ்க்கையை காண்பது எனக்கு ஒரு கண்கவர் அனுபவமாகும். அதுவே இந்த கண்காட்சியை நடாத்தும் முயற்சிக்கு கொண்டுசென்று சேர்த்துள்ளது. உங்களுக்கு பொறுமை இருந்தால், சுவாரஸ்யமானதும் இவ்வுலகம் சார்ந்ததுமான புகைப்படங்களை கொண்டு இடைவெளி விட்டமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்பினை நீங்கள் ருசிக்க முடியும். உயர் மதிப்புமிக்க வயதான பெண்ணின் (Grande Dame) முன்னாலுள்ள, மேலேயுள்ள மற்றும் கீழே காணப்படும் வாழ்க்கையை இப் புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன. நான் என்ன செய்திருக்கின்றேன் என்றால் - பார்வையாளர்களை கவரும் ஆதரமாக, கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்ற முப்பது புகைப்படங்களினதும் முன்புறமாகவும் நடுவிலும் பின்னணியிலும் இவ் வயதான பெண்ணை பயன்படுத்தியிருக்கின்றேன். 'Gustav Eiffel’s Creation' இற்கு இது முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை வழங்கும் என்று நான் நம்புகின்றேன்' என்று குமார் டி சில்வா தெரிவித்தார்.
 
(ITN) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி புகழ்பெற்றது மாத்திரமன்றி, பின்னர் வீடுகள்தோறும் பிரபலமான நிகழ்ச்சிப் பெயராகவும் திகழ்ந்த பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'Bonsoir' மூலம் 1986ஆம் ஆண்டு இவர் சின்னத் திரைக்கு முதன்முதலாக அறிமுகமானார். 
 
'பிரான்ஸ் நாட்டின் ஒரு உன்னத நண்பராகவும், அந்நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை நேர்மையுடன் நேசிப்பவராகவும் குமார் டி சில்வா திகழ்கின்றார். அந்நாட்டின் கலாசாரத்தையும் மொழியையும் மிகச் சரியாக அறிந்து வைத்துள்ள அவர், அவற்றை ஏனையோருடன் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளார். மேலும், அடையாளச் சின்னங்கள் மீது அவர் உண்மையான பிரியத்தைக் கொண்டிருப்பதுடன் வேடிக்கை மற்றும் கலைக் கண்ணோடு வெளிப்படுத்தும் பொருட்டு அவற்றிலிருந்து ஒன்றை இப்போது தேர்ந்தெடுத்துள்ளார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது – ஒரு நாட்டினதும் அதனது தலைநரத்தினதும் நவீனமான மற்றும் மிக தனித்துவமான அடையாளமாகும். இலங்கையில் ஒரு மதிப்புமிக்க அறிவு புகட்டுனராகவும் அதேபோன்று கலைஞராகவும் திகழ்பவர் என்ற வகையில். மானிட புத்திக்கூர்மையின் ஒரு தலையாய பண்பை கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் எமக்கு இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக குமார் டி சில்வாவுக்கு எம்மால் நன்றி தெரிவிக்கவே முடியும்' என்று கொழும்பிலுள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே நிலையத்தின் பணிப்பாளர் அலெக்ஸாண்டர் மார்டினஸ் தெரிவித்தார். 
 
இல:18, கொனிஸ்டன் பிளேஸ், கொழும்பு – 7 என்ற முகவரியில் அமைந்துள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே நிலையமே கொழும்பு மற்றும் கொழும்பு பெரும்பாக பகுதிகளில் இயங்கும் இவ்வாறான ஒரேயொரு பிரெஞ்சு மொழி மற்றும் காலாசார மையமாக காணப்படுகின்றது. பாரிஸ் நகரிலுள்ள பவுண்டேசன் அலையன்ஸ் பிரான்சைஸ் டி கோட்டே உடன் ஒன்றிணைந்து செயற்படும் இந்நிலையயமானது, பிரான்ஸ் அரசாங்கத்தினதும் இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தினதும் முழுமையான ஆதரவுடன் இயங்கி வருகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .