2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிலக்கரி மின்உற்பத்தி நிலையமொன்றை அமைக்க இந்தியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்து

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடகிழக்கு கரையோரப்பகுதியில் 500MW வலு கொண்ட மின்உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையத்தின் பணிகள் 2018ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட்டு பிரதான மின்வழங்கல் சுற்றுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கை தேசிய மின்சார சபை இந்த உடன்படிக்கையை இந்தியாவின் தேசிய அனல் மின் வலு கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் திருகோணமலை பவர் கம்பனியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. இரு தரப்பும் இந்த புதிய உற்பத்தி நிலையத்தின் 50 வீத பங்குரிமையை கொண்டிருக்கும்.
 
இந்த மின்உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மொத்த செலவீனம் 512 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .