2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையின் இறப்பர் துறையை விரிவாக்க நடவடிக்கை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தசாப்த காலப்பகுதியினுள் 3.0 பில்லியன் அமெ.டொலர் பெறுமதியான துறையாக இறப்பர் துறையினை மாற்ற அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
 
நாட்டின் உற்பத்தி செய்யப்படும் இறப்பரின் 70 வீதத்தின் மூலம் தொழில்துறை சார்ந்த தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த துறையின் பெறுமதி 1.2 பில்லியன் அமெ.டொலராக காணப்படுகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் வழங்கப்படும் உதவியின் மூலம் இந்த துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
இந்த துறை 200,000 தொழிலாளர்களை கொண்டமைந்துள்ளதுடன், பெருமளவு சிறு பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாளர்களை கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .