2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

லக்சல நிறுவனத்தின் இணையத்தளத்திற்கு வெண்கல விருது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் நடைபெற்ற இலங்கையின் சிறந்த இணையத்தள போட்டியில் அரச பிரிவின் கீழ், இலங்கையின் பழைமையானதும், அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகளை வடிவமைப்பதில் பிரபல்யம் பெற்ற லக்சல நிறுவனத்தின் இணையத்தளம் வெண்கல விருதினை வென்றுள்ளது. இவ் விருதானது www.laksala.gov.lk இணையத்தளத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம், வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் சிறப்புத் தன்மை காரணமாக வழங்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு இணையத்தளமும் கடுமையான தேர்வு நெறிமுறைகளுக்கு அமைய விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விருதுக்கான பதிவுகள் அனைத்தும் தொழில்நுட்ப வலிமை, வடிவமைப்பு திறன், உள்ளடக்கம் மற்றும் ஈடுபாடு போன்ற 4 பரந்த பிரிவுகளின் கீழ் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இந்த இணையத்தளமானது அரசுரிமை கெண்ட அன்பளிப்பு நிறுவனத்தின் தோற்றம்;, குறிக்கோள், பிரதான மதிப்புகள், காட்சியறை வலையமைப்பு மற்றும் ஆண்டறிக்கை ஆகியவற்றின் விபரங்களை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து விடயங்களையும் ஒரே கூரையின் கீழ் சித்தரித்தல், பயனர் இலகுத்தன்மை, பிரகாசமான படங்கள், தெளிவான கட்டிடக்கலை, ஒவ்வொரு தயாரிப்புகள் குறித்தும் படைப்பாற்றலுடனான பயனுள்ள தகவல்கள் ஆகியன லக்சல நிறுவனம் வெண்கல விருதினை வென்றமைக்கான பிரதான காரணிகளாகும்.
 
பல வருடங்களாக இலாபமற்ற நிறுவனமாக கருதப்பட்ட லக்சல நிறுவனத்தை நவீனமயப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே எமது குழுவினர் மூலம் லக்சல இணையத்தளம் தோற்றம் பெற்றது. தேயிலை, சரக்கு பொருட்கள், ஆடைகள், ஃபெப்ரிக், சித்திரம், கைவினைப் பொருள், தோல் மற்றும் மட்பாண்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய Laksala.gov.lk ஆனது ஓர் இணைய வர்த்தக (e-commerce) தளமாகும். இவ் இணையத்தளத்தில் பலவித பொருட்களை பார்வையிடக் கூடியதாகவுள்ளதுடன், அவற்றை ஒன்லைன் மூலமாக கொள்வனவு செய்து அங்கீகாரம் பெற்ற கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. மேலும் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இவ்வகையான கைவினை பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்யும் வகையில் தத்தமது நாட்டு நாணய அலகுகளின் பிரகாரம் விற்கும் விலையும், ஒவ்வொரு பொருளும் அடிப்படை விளக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த வெற்றி குறித்து லக்சல நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், தலைவருமான அனில் கொஸ்வத்த கருத்து தெரிவிக்கையில், 'உலகம் பூராகவும் உள்ள எந்தவொரு தனிநபரும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய பயனர் தோழமையுடனான தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதே எமது இணையத்தளத்தின் சிறப்பம்சமாகும். செயற்திறன் மிக்க இணையத்தளத்தை கொண்டிருப்பதன் மூலம் எமது இலக்கு வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கவும், இறுதியாக இணையத்தளம் ஊடாக விற்பனையை அதிகரிக்கச் செய்து நிறுவனத்திற்கு அனுகூலங்களை வழங்கவும் முடிந்துள்ளது. எமது இணையத்தளத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பொருட்களை அதிகரித்து, அதிகப்படியான விபரங்களை உள்ளடக்கி நாடுபூராகவும் உள்ள எமது விநியோகஸ்தர்களின் தகவல்களை வழங்குவதே எமது அடுத்த எதிர்பார்ப்பாகும்' என தெரிவித்தார்.       
 
இந்த இணையத்தள போட்டியானது 2009 ஆம் ஆண்டு முதல் LK டொமைன் பதிவகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந் நிகழ்வில் பாவனையாளர் மற்றும் ந-வணிகம், பெரு நிறுவனம், வங்கி மற்றும் நிதி, அபிவிருத்தி, அரசு, ஊடகம், பொதுச்சேவை மற்றும் கல்வி, சிங்களம்;விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, தமிழ் போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் சிறந்த வலைத்தளங்களை அங்கீகரித்து, வெப் வடிவமைப்பாளர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களை அடையாளப்படுத்தி ஊக்குவிப்பதே இந் நிகழ்வின் குறிக்கோளாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .