2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றுமுதல் இலங்கையில் அணு சக்தி தொடர்பான கருத்தரங்கு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல் இலங்கையில் அணு சக்தி தொடர்பான கருத்தரங்கொன்று மூன்று நாட்களுக்கு இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.
 
இந்த கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணு சக்தி தொடர்பான வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்த கருத்தரங்கில் பங்களாதேஷ், பெலாரஸ், எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, பெரு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.
 
பாதுகாப்பான, நீ்ண்ட காலநோக்குள்ள அணு சக்தி திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அமைச்சு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .