2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரதுபஸ்வல டிப்ட் புரொடக்ட்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதனால் பாரிய நஷ்டம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று மாத காலமாக மூடப்பட்டுள்ள ரதுபஸ்வல டிப்ட் புரொடக்ட்ஸ் தொழிற்சாலையின் செயற்பாடுகள் முடங்கிக் கிடப்பதன் காரணமாக ஹேலீஸ் குழுமத்துக்கு 900 மில்லியன் ரூபா வரை புரள்வு பெறுமதியில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், 180 மில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கம்பனி அறிவித்துள்ளது.
 
குறித்த பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளையும், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை வடிகட்டிய செயன்முறைக்கு உட்படுத்திய பின்னர் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள தாம் முன்வந்திருந்த போதிலும், தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான அனுமதியை தமக்கு வழங்குவதற்கு குறித்த அதிகாரிகள் முன்வரவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .