2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீட்டுக்கு-வீடு சேமிப்பு ஊக்குவிப்பு: பிரசாரத்தில் செலான் வங்கி

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் மீள் அறிமுகம் செய்யப்பட்டதும், பெருமளவான அனுகூலங்களை தன்னகத்தே கொண்டதுமான செலான் வங்கியின் முக்கிய சேமிப்புக் கணக்குகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதன் ஊடாக, இலங்கை மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் அடிப்படை இலக்குடன், நாடு முழுவதிலும் அமைந்துள்ள செலான் வங்கியின் 150 கிளைகளைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நவம்பர் 9ஆம் திகதி சனிக்கிழமை வீட்டுக்கு - வீடு சென்று மாபெரும் பிரசார நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த ஊக்குவிப்பு பிரசாரத்தின் போது ஒட்டுமொத்த செலான் வங்கி அணியினரும் வீதிகளில் இறங்கி பொதுமக்களுடன் உரையாடி தெளிவுறச் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கும். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களை சென்றடைவதற்கு இந்த முன்னெடுப்பு ஒரு உந்துதலாக அமையும்.

இப்புதிய சேமிப்பு திட்டம் கொண்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து தனிப்பட்ட ரீதியில் தெளிவு படுத்துவதற்காகவும் அதேவேளை எதிர்கால சுபீட்சத்திற்காகவும் விவேகமுள்ள சேமிப்பை கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இலங்கையில் வாழும் பொதுமக்களுக்கு பற்றுறுதி ஏற்படுத்துவதற்காகவும் செலான்  வங்கியின் முகாமைத்துவ உயரதிகாரிகளும் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து இம்முன்னெடுப்பில் கைகோர்ப்பார்கள்.


செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில ஆரியரத்ன கூறுகையில், 'இந்த செயற்றிட்டத்தில் களமிறங்குவதையிட்டு உண்மையிலேயே நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்களது வாசற்படியில்  வைத்து மேலும் நெருக்கமான விதத்தில் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இது எமக்கு வழங்குகின்றது.

இந்த நிகழ்வு ஏற்படுத்தவிருக்கும் உற்சாகத்திற்கு மேலதிகமாக – பகுத்தறியும் ஆற்றலுள்ள சேமிப்பாளர்களின் தேவைகளுக்கு பொருந்தக் கூடியவாறு பெருமளவிலான சிறப்பம்சங்கள், பரிசுகள் மற்றும் அனுகூலங்களை தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்புமிக்க,  புத்தாக்கமான சேமிப்புசார் சேவைகளின் ஊடாக சேமிப்பை ஊக்குவிக்கும் விடயத்திலும் நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எமது நாடு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், சேமிப்புப் பழக்கத்தை மேம்பாடடையச் செய்வதானது சேமிப்பாளர்களுக்கு சுபீட்சத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவது மட்டுமன்றி, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உந்துசக்தி அளிக்கும். 

Seylan Tikiri’மற்றும் Seylan SURE’

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .