
செலான் வங்கியானது கடந்த சனிக்கிழமை பிரமாண்டமான வீட்டுக்கு-வீடு பிரசாரத் திட்டத்தை முன்னெடுத்தது. நாடு முழுவதிலும் அமைந்துள்ள செலான் வங்கியின் 150 கிளைகளைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள்;; இப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், இலங்கையின் பெருமளவிலான பொது மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை தனிப்பட்ட முறையில் ஊக்குவித்தனர்.
இந்த ஊக்குவிப்பு பிரசாரத்தின் போது செலான் வங்கியின் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து முகாமைத்துவ உயரதிகாரிகளும் வீதிகளில் இறங்கி பல்லாயிரக் கணக்கான பொது மக்களுடன் உரையாடியதையும் அதேபோல் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிச்சயமற்ற தன்மைகளை கருத்திற் கொண்டும் எதிர்கால சுபீட்சத்திற்காகவும் விவேகமுள்ள சேமிப்பை கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு கவனமாக தெளிவுபடுத்தியதையும் காணக்கூடியதாக இருந்தது. செலான் வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டு, அண்மையில் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளுக்காக மீள அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கான செலான் சுவர் (Seylan SURE) அனுகூல திட்டத்தின் மூலம் இம் முன்னெடுப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 31ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் உலக சிக்கன தின வெகுமதிகளின் உச்சக்கட்டம் போல அமைந்த இந்த ஊக்குவிப்பு பிரசார நடவடிக்கைக்கு பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கருத்துக்கள் மற்றும் பிரதிபலிப்புக்கள் மிகவும் ஊக்கமளிப்பவையாகவும் சாதகமானவையாகவும் காணப்பட்ட அதேவேளை, அண்மைக் காலங்களில் வங்கியியல் துறையில் முன்னெடுக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான பிரசார நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் இதனை மாற்றியமைத்திருக்கின்றது. இந்த பிரசாரத்திட்டத்தின் மற்றுமொரு சிறப்புத் தன்மை என்னவென்றால், வங்கியின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் சமூக வலைத்தள வழிமுறைகளின் ஊடாகவும் நிகழ்நேரத்திலேயே இப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்;டமையாகும். அந்தவகையில் இதுவும் கூட வங்கியியல் துறையில் நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு முதன்முதலான முன்னெடுப்பாக அமைகின்றது.