2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பெகஸஸ் ரீஃப் ஹோட்டலின் பண்டிகைக் காலத்திற்காக விஷேட நிகழ்வுகள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


வத்தளையில் அமைந்துள்ள பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் (Pegasus Reef Hotel) எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கான விஷேட நிகழ்வுகள் தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் நிறுவனத்தின் வருடாந்த Mixing of the Christmas Cake Ceremony நிகழ்வுடன் ஒருங்கிசைந்ததாக இந் நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 
 
ஹோட்டல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆளுமையும் பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் பணிப்பாளருமான திரு. பெடி விதான அவர்கள் கூறுகையில், 'இலங்கையின் இப்பகுதியில் கிறிஸ்மஸ் ஆனது மிகவும் பிரபல்யமானதும் அதிகமானோரால் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கின்றது. எனவேதான், எமது ஹோட்டலில் இதற்கு முன்னர் இல்லாதவாறு இவ்வருடத்தின் பண்டிகைக் காலத்தை மாற்றியமைப்பதில் நாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்' என்றார்.
 
டிசம்பர் மாதம் உதயமாகின்ற போது பண்டிகைக் காலம் பற்றிய முன்னுணர்வு பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் முழுவதும் வியாபித்திருக்கும் அதேவேளை, 2013 டிசம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் முழுமூச்சில் அது இடம்பெறும். இதன்போது நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகளுள் - ரம்மியமான மாலைப்பொழுதில் மதுபான வகைகள், சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி, அழகுசார் அணிவகுப்பு போட்டி, கலிப்சோ இசை, மணல் கோட்டை போட்டி, புதையல் வேட்டைகள், முகத்துக்கு வர்ணம் பூசுதல், கடற்கரையில் உணவருந்தல், திறந்த வெளியரங்கில் கிறிஸ்மஸ் திரைப்படங்கள் மற்றும் நத்தார் தாத்தாவின் வருகை என பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளடங்குகின்றன. 
 
கிறிஸ்மஸிற்கு முன்னைய நாள் மாலை நேரத்தில் பெகஸஸ் ரீஃப் ஹோட்டலின் லோங்ச் பார்ரில் பிரிவானது கரோல் கீதங்களின் பின்னணி இசையில் 'Santa’s Cocktail' மதுபான உபசாரத்தை நடாத்துவதுடன், அதனைத் தொடர்ந்து கிறிஸ்மஸிற்கு முன்னைய நாள் இரவுநேர விருந்துபசாரம் (Christmas Eve Dinner) பிரதான உணவகத்தில் இடம்பெறும். டிசம்பர் 25ஆம் திகதி நிகழ்வுகளின் முக்கிய சிறப்பம்சங்களாக – பிரதான உணவகத்தில் இடம்பெறும் Christmas Lunch Buffet மற்றும் அன்றிரவு வேளையில் சமையற்காரரால்  கடற்கரையில் விஷேடமாக அமைக்கப்பட்ட மேசையில் பரிமாறப்படும் Beach Dining விருந்துபசாரம் போன்றவை காணப்படுகின்றன. 
 
கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்தநாள் வழங்கப்படும் வெகுமதிகளாக – காலைநேர யோகா பயிற்சி, கரப்பந்தாட்டப் போட்டி ஆகியன அமையும் அதேநேரம், அதன் உச்சக்கட்டமாக வைன் உற்பத்தியாளர்களின்  திறந்தவெளி இரவுணவு உபசார நிகழ்வு பூங்காவிலே இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. லோங்ச் பார்ரில் இடம்பெறுகின்ற பிரியாவிடை மதுபான உபசார நிகழ்வு, அதனைத் தொடர்ந்து இடம்பெறும் புதுவருடத்திற்கு முந்திய நாள் புபே இரவுணவு உபசாரம் மற்றும் இவற்றுடன் இணைந்ததாக நடைபெறும் நள்ளிரவு வாண வெடிகள் என்பவற்றுடன் பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது 2013ஆம் ஆண்டினை வழியனுப்பி வைக்கவுள்ளது. 
 
சில மணித்தியாலங்களின் பின்னர் அதாவது 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது, சம்பிரதாயபூர்வ குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் பிரபலங்களுக்கான சம்பைன் காலையுணவு உபசாரம் ஆகியவற்றுடன் தன்னுடைய தொழிற்பாடுகளை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கும். 
 
ஹோட்டலுக்கு புதுப்பொலிவூட்டும் ரூபா 60 மில்லியன் செலவிலான செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக புதிதாக புதுப்பிக்கப்பட்ட தனது விழா மண்டபத்தை (Ball Room) பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதன்மூலம் எப்போதும் அதிகரித்த வண்ணமுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற சேவைகளை மேலும் மேம்படுத்தி இருக்கின்றது. மிகவும் தூரநோக்குமிக்க இந்த செயற்றிட்டம் பெகஸஸ் ரீஃப் ஹோட்டலுக்கு உயர்;ந்ததொரு பலாபலனை பெற்றுத்தந்துள்ளது மட்டுமன்றி, கொழும்பு வடக்கு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் எல்லாம் பரந்துள்ள பெருமளவான வாடிக்கையாளர்களின் சாதகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. 'உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், விடுமுறைகால உல்லாசப் பயணிகள் மற்றும் இடைத்தங்கல் வகையைச் சேர்ந்தோர் போன்ற தரப்பினரை ஒருங்கே கொண்ட கலவையே எமது வாடிக்கையாளர்களர் இலக்காகும். ஒரு நகர்ப்புற ஹோட்டலையும் தாண்டிய சௌகரியத்துடன், மேலதிகமாக உடலுக்கும் ஆத்மாவுக்கும் இதமளிக்கும் பொழுதுபோக்கு சூழலையும் கொண்டமைந்துள்ள பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது MICE நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள் மற்றும் தேனிலவைக் கழிப்போருக்கும் பிரபலமான ஒரு இடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது' என்று திரு. விதான அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
 
கொழும்பு வடக்குக்; கடற்கரையோரமாகவும் அதேநேரம் துறைமுகத்தை அங்கிருந்து பார்க்கும் வகையிலும் அமையப் பெற்றிருக்கின்ற பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் என்பது, அழகிய, மன அமைதிக்கான இடமாகவும் அதேபோன்று சூரியன் முத்தமிடுகின்ற இலங்கையின் ரம்மியமான கடற்கரைகளுள் ஒன்றாகவும் காணப்படுகின்றது. கொழும்பு கோட்டையில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெகஸஸ் ரீஃப் ஹோட்டல் ஆனது, கொழும்பு தலைநகர் பகுதி மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பவற்றுக்கு இடைப்பட்ட ஹெந்தல - வத்தளை பிரதேசத்தில் உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம்,  எதிலும் இரண்டாம் தரமில்லாத சௌகரிய தெரிவுகளை இது தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .