2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆசிய தலைமைத்துவ விருது வழங்கும் நிகழ்வில் ஜனசக்தி பிரகாசிப்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி காப்புறுதி வழங்குநராக திகழும் ஜனசக்தி நிறுவனமானது, தொடர்ச்சியாக சர்வதேச வியாபார துறையில் தமது திறமையை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் டுபாய் நகரில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ விருது வழங்கும் நிகழ்வில் 'வர்த்தகநாம தலைமைத்துவ விருது' மற்றும் 'சந்தை முன்னோடியாளர் விருது' ஆகிய விருதுகளை வென்றுள்ளது. 
 
இவ் ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் சாதனையாளர்கள், சிறந்த சாதனையாளர்கள் மற்றும் எதிர்கால வணிக தலைவர்கள் ஆகியோரை கௌரவித்து விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந் நிகழ்வில் தமது இலக்கினை வெற்றி கொள்வதற்கு சிறப்பான வியாபார மாதிரிகளை உருவாக்கிய வியாபாரத் தலைவர்களை அடையாளப்படுத்தி வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ விருது வழங்கும் நிகழ்வில் ஜனசக்தி தனது மூன்றாவது விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
'தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இவ் அதியுயர் விருதுகளை வென்றமையானது, இன்றைய காப்புறுதி துறைக்கு பொருந்தக்கூடிய ஓர் திருப்புமுனையாக அமைந்துள்ளது. புதிய பொருட்களின் அபிவிருத்திகள், புத்தாக்க உற்பத்தி மற்றும் சேவை மேம்படுத்தலுக்கு கிடைத்த சான்றாகவும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சர்வதேச வர்த்தகநாமங்கள் மத்தியில் நாம் கௌரவிக்கப்பட்டோம். இது எமது வினைத்திறன் மிக்க சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகநாம முகாமைத்துவ உத்திகள் ஊடாக எமது சந்தை பங்கினை பாதுகாத்து அதனூடாக வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரரின் மதிப்பை மேம்படுத்தியதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்' என ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
 
ALA விருதுகள் வழங்கும் நிகழ்வானது ஆசிய துறைகளைச் சேர்ந்த தீர்மானமெடுப்பவர்கள் மத்தியில் தலைமைத்துவம் மற்றும்; வலையமைப்பு ஊடாக உயர் மட்ட தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக அமைந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந் நிகழ்வில் பல்வேறு நாடுகள் மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தவிர, சுமார் 150 தீர்மானமெடுப்பவர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர். 'சர்வதேச புகழ்பெற்ற வர்த்கதநாமங்கள் மத்தியில் பங்கேற்றமையினால் ஜனசக்திக்கு இது ஒரு பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்திருந்தது. எமது வாடிக்கையாளர்களின் கேள்விகள் மற்றும் மாற்றமடையும் தேவைகள் அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக பல மேம்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .