
இன்றைய உலகில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு இன்றியமையாததாக காணப்படுகின்றபோதிலும் இத்தொலைபேசிகளை பயன்படுத்தும்போது அதன் பாதுகாப்பு தொடர்பாக மக்களின் எண்ணக்கரு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.
பெரும்பாலோனோர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு இரகசிய குறியீட்டு இலக்கங்களை பயன்படுத்தி பாவனை செய்கின்றபோதிலும் இவை இணையத்தளத்துடன் இணைகின்ற பட்சத்தில் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு அன்ரொய்ட் தொலைபேசிகளை பயன்படுத்துவோர் இணையத்தளத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தும்போது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மொன்பொருள் ஈசெட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஈசெட் நிறுவனம் VB100 என்ற சர்வதேச விருதை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஈசெட் NOD32 தொழில்நுட்பத்துக்காக வென்றெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய மென்பொருள் உலக மற்றும் கணினி எண்சமிக்ஞை (Digital) ஆகிய அச்சுறுத்தல்களிலிருந்து அன்ரொய்ட்களையும், கணினிகளையும் பாதுகாக்கின்றது.
எனவே புதிய மொன்பொருளை பயன்படுத்துபவர்களுக்கு தமது அன்ரொய்ட்களையோ , டெப்லட் கணினிகளையே எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஈசெட் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
'மெல்வெயார் மென்பொருள்களின் அதிகரிப்பும் அன்ரொய்ட் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடும் இணைய உலகத்தில் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. ஈசெட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய மென்பொருள் ஸ்கேன்,பீச்;சர்ஸ்களை கொண்டிருப்பதால் அன்ரொய்ட்களை பயன்படுத்துவர்கள் எவ்வித அழுத்தமுமின்றி தமது இணையத்தள நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இதனால் அன்ரொய்ட்கள் ஊடாக இணையத்தளத்தில் பிரவேசிக்கும்போதும், தரவுகளை பதிவிறக்கம் செய்யும்போதும் அது தொடர்பாக அச்சப்பட தேவையில்லை. குறிப்பாக வை-பைவ், மின்னஞ்சலுக்கு பிரவேசிக்கும்போதும் அச்சுறுத்தலின்றி பிரவேசிக்கலாம்.' என டீசிஎஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் சிஹான் அன்னன் தெரிவித்தார்.
ஈசெட் ஆசியாவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் பர்விந்த வாலியா கருத்து தெரிவிக்கையில், ' இந்த புதிய மென்பொருள் புலப்படும் மற்றும் புலப்படாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.' என தெரிவித்தார்.