
நாடளாவிய ரீதியில் தனது விநியோக வலையமைப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், தனது உற்பத்திகளுக்கு அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையிலும் தனது விநியோக வலையமைப்பை விஸ்தரிக்கும் நடவடிக்கையை சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி முன்னெடுத்து வருகிறது. இதன் மற்றுமொரு கட்டமாக பண்டாரவளை நகரில் தனது கிரிப்டன் தயாரிப்புகளை விநியோகிப்பதற்கென புதிய விநியோகத்தரை நியமித்துள்ளது. நஷனல் PVC குழாய்கள் மற்றும் பொருத்திகள் உற்பத்தி செய்வதில் சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம் புகழ்பெற்று திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய அங்கீகாரம் பெற்ற விநியோகத்தராக, ஒடோ இலெக்ரிகல்ஸ் (பதுளை வீதியில், பிந்துனுவௌ, பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ளது) எனும் பண்டாரவளை நகரில் புகழ்பெற்ற வர்த்தக தாபனம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விநியோகத்தர் காட்சியறையின் அங்குரார்ப்பண நிகழ்வு சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரியந்த அபேகோன், சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஹேமந்த ஆரம்பேபொல, பண்டாரவளை ஒடோ இலெக்ரிகல்ஸ் உரிமையாளர் சி கே போபிட்டிய, திருமதி போபிட்டிய மற்றும் விருந்தினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
சென்ரல் இன்டஸ்ரிஸ் தயாரிப்புகள் அவற்றின் நம்பகத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரதான காரணிகளின் மூலம், இலங்கையர்களின் முதல் தர தெரிவாக அமைந்துள்ளன. இதன் காரணமாக, நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான கேள்வி கடந்த ஆண்டுகளில் சடுதியாக அதிகரித்துள்ளது. 'நம்பகத்தன்மையுடனான பாதுகாப்பான உறவு' எனும் கருப்பொருள் சென்ரல் இன்டஸ்ரிஸ் தயாரிப்புகளுடன் சேர்ந்துள்ளன. கம்பனியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கிரிப்டன் இலத்திரனியல் சுவிட்ச்கள், சொக்கட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் வடிவமைப்பு மற்றும் தரங்கள் போன்றன பிரத்தியேகமானதும், சிறப்புத்தேர்ச்சி வாய்ந்தனவாகவும் அமைந்துள்ளன.
இந்த நிகழ்வில் சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் பிரியங்கர பயாகலகே கருத்து தெரிவிக்கையில், 'கிரிப்டன் இலத்திரனியல் சுவிட்ச்கள், சொக்கட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளடங்கலான அனைத்து பொருட்களும் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. எனவே நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களை நியமிப்பதற்கு நாம் தீர்மானித்தோம். இதன் மூலம் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் கேள்வியை நிவர்த்தி செய்ய முடியுமென நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.
'அனைத்து மாவட்டங்களிலும் நாம் விநியோகத்தர்களை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் மேலும் பல விநியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த செயற்பாட்டின் ஒரே நோக்கம், எமது வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாகும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், அக்காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த ஜப்பானிய தரச்சான்றிதழ்கள் வழங்கல் முறைமைக்கு பதிலாக இலங்கை தரச்சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட போது, அதனை பெற்றுக் கொண்ட முதலாவது இலங்கை நிறுவனம் எனும் பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன், ISO 9001 தரச்சான்றை பெற்றுக்கொண்ட முதலாவது குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனம் எனும் பெருமையையும் தனதாக்கியிருந்தது. பின்னர், சென்ரல் இன்டஸ்ரிஸ் கிரிப்டன் இலத்திரனியல் சுவிட்ச்களையும், உதிரிப்பாகங்களையும் உற்பத்தி செய்ய ஈடுபட்டதுடன், இந்த கிரிப்டன் தயாரிப்புகள் மக்களின் நம்பிக்கையை வென்ற சொக்கட் வகைகள் மட்டுமல்லாமல் Switches, circuit breakers, trips மற்றும் main switch வகைகளை உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது.
நஷனல் PVC குழாய்கள் மற்றும் கிரிப்டன் சுவிட்ச் வகைகளை உற்பத்தி செய்வதற்கு மேலாக, சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி மின் சாதனங்களையும், ஜேர்மனியின் FRISCHHUT DI Fittings (PVC குழாய்களுக்கு பொருத்தமான) ஆகியவற்றை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக முகவராகவும் திகழ்கிறது. இலங்கையில் 27 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம், ISO 9001, SLS 147, SLS 659, SLS 935, SLS 948, SLS 659 மற்றும் SLS 1000 தரச்சான்றுகளை பெற்ற சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். சென்ரல் ஃபினான்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.