2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூன்று கிழமைகளில் பதிவாகிய அதியுயர் பெறுமதி நேற்று மீண்டும் சரிவு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள் நேற்றைய தினம் மீண்டும் சரிவான பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. மூன்று கிழமைகளில் பதிவாகிய அதியுயர் பெறுமதியை நேற்று முன்தினம் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் போது பதிவு செய்திருந்த கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, நேற்றையதினம் நெஸ்லே லங்கா மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய பங்குகளின் விலைச்சரிவுகள் இதில் அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தன.
 
மொத்தப்புரள்வு பெறுமதி அரை பில்லியன் ரூபாவை விட குறைவாகவே பதிவாகியிருந்தது. யுனைட்டட் மோட்டர்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான மொத்த பங்கு கைமாறல்கள் புரள்வு பெறுமதியில் பங்களிப்பை வழங்கியிருந்தன. வெளிநாட்டவர்களின் ஈடுபாடும் இந்த பங்குகள் மீது காணப்பட்டது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் நு-செனலிங் பங்குகளின் மீது மட்டும் அவதானிக்கப்பட்டிருந்தது.
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் மோட்டார் துறை அதியுயர் பங்களிப்பை வழங்கியிருந்தது (யுனைட்டட் மோட்டர்ஸ் பங்களிப்புடன்). இந்த துறை சுட்டி 0.16% உயர்வை பதிவு செய்திருந்தது. யுனைட்டட் மோட்டர்ஸ் பங்கொன்றின் விலை 0.60 ரூபாவால் (0.55%) உயர்வடைந்து 110.60 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,876,500 பங்குகளால் அதிகரித்திருந்தது.
 
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் பன்முகத் துறை அதியுயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை சுட்டி 0.79% சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் (0.09%) குறைந்து 214.80 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 225,802 பங்குகளால் அதிகரித்திருந்தது.
 
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை பங்குகளான சம்பத் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியன மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன.
 
மேலும், சிலோன் டீ சேர்விசஸ் தனது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 10 ரூபா வீதம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .