2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அண்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை செயற்பாடுகளை நேரடியாக அண்ட்ரொயிட் கையடக்க தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்ளிகேஷன், கூகுள் ப்ளே பகுதியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
 
எந்தவொரு அண்ட்ரொயிட் சாதனத்திலும் இயங்கும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய ஆப்ளிகேஷன் சந்தைச் சுருக்கம், அ.ப.வி.சுட்டெண் மற்றும் S&P SL 20 சுட்டிகளின் விபரம், வரைபு விபரங்கள், நவீன கைமாறல்கள், அறிவித்தல்கள், விலை பட்டியல்கள், இலாபமீட்டிய மற்றும் நட்டமீட்டிய விபரங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள், மற்றும் நாடு முழுவதுமுள்ள பங்குதாரர்களுக்கு விபரங்களை வழங்கும் வகையில் இந்த ஆப்ளிகேஷன் அமைந்துள்ளது.
 
இந்த ஆப்ளிகேஷன் மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .