2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செலான் கிறிஸ்மஸ் திட்டம் கடனட்டைகளுக்கு வெகுமதிகள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் செலான் வங்கியானது, தனது 'செலான் கிறிஸ்மஸ் திட்டத்தின்' (Seylan Christmas Planner) ஒரு அங்கமாக நாடெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு இதற்கு முன்னர் ஒருபோதும் அனுபவித்திராத ஒரு தொடரிலான சலுகைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகளவான வெகுமதிகளை அளிப்பதற்கு தயாராகியுள்ளது. 
 
ஆடைக் கொள்வனவு, சுப்பர் மார்க்கெட் பொருட் கொள்வனவு, எரிபொருள் நிரப்புதல் மற்றும் தங்கநகை கொள்வனவு போன்ற பலவற்றின் ஊடாக வெகுமதிகள் வழங்கப்படவுள்ளதால் டிசம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் மனமகிழ்ச்சி தரக்கூடியதாக தற்போது மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. அதன்மூலம் பணத்திற்கான மிகச் சிறந்த பெறுமதியோடு இணைந்ததாக விடுமுறைக்கால மனநிலையானது மேம்படுத்தப்படுகின்றது.
 
அனைத்து மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கும் வெள்ளிக்கிழமை பிற்பகலானது ஒரு வரமாக அமையும். ஏனென்றால் அத்தினத்தில் அனைத்து லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிற்பகல் 4 மணிமுதல் மாலை 8 மணி வரையும் நிரப்பப்படுகின்ற ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் ரூபா 10 மீளளிக்கப்படும். அதேநேரம், வார இறுதியின் இரு நாட்களிலும் பிற்பகல் 4 மணி முதல் மாலை 8 மணி வரைக்கும் சுப்பர் மார்க்கெட்டில் மேற்கொள்ளப்படும் பொருட்கொள்வனவின் போதும் மொத்த பட்டியல் தொகையில் 10% தொகை மீள வழங்கப்படுவதால், அந்த அனுபவமானது களிப்பு நிறைந்ததாகவும் இலாபகரமானதாகவும் மாற்றமடைகின்றது. சுப்பர் மார்க்கெட்களில் வழங்கப்படும் வெகுமதிகளில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், ஒருவர் நாடெங்குமுள்ள தமக்கு விருப்பமான எந்தவொரு சுப்பர் மார்க்கெட் விற்பனையகத்திலும் பொருட் கொள்வனவை மேற்கொள்ளலாம் என்பதும் குறிப்பிட்ட ஒரு சுப்பர்மார்க்கெட் சங்கிலித்தொடருக்கு மாத்திரம் இவ் வெகுமதி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுமாகும். 
 
கிறிஸ்மஸ் மற்றும் புது வருடத்திற்கு தயாராகிக் கொள்ளும் விதத்தில், செலான் வங்கியின் கடனட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 20% தொடக்கம் அபாரமான 40% வரையில் பல்வேறு விலைக் கழிவுகளை வழங்குவதற்காக முன்னணி விற்பனையகங்கள் மற்றும் முதன்னிலை வர்த்தக குறியீடுகள் அனைத்துமே ஒன்றாக கைகோர்த்துள்ளன. 
 
அவற்றுள் - ஹமீடியா, நோலிமிற், ஸ்ரோன் அன்ட் ஸ்ரிங், கூல் பிளனட், கிட்ஸ் அன்லிமிட்டட், டயமென்ட் ட்ரீம்ஸ், கல்லரியா, மதர் கெயார், பள்ளு, சேர்ட்வேர்க்ஸ், வென்ஃபீல்ட், வௌpஸ், கெல்லி பெல்டர், அடிடாஸ், டில்லி அன்ட் கர்லோ, ரோமாபோர், மல்லிகா ஹேமச்சந்திர, சி.ஐ.பி. ஷொப்பிங் சென்டர், லுமாலா, கியர்டானோ மற்றும் கிளிற்ஸ் போன்ற நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன. 
 
இதற்கு மேலதிகமாக, இந்த டிசம்பர் பண்டிகைக் காலத்தில்  கடனட்டை வாடிக்கையாளர்கள் தமது உள்ளம் விரும்புகின்ற விடயங்களுக்காக கடனட்டை ஊடாக செலவு செய்யவும் அதேபோன்று வெளிப்படையாக அறிவிடப்படும் கவர்ச்சிகரமான  (வட்டி) வீதத்துடன் தமது சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் அத்தொகையை 12 மாதங்களில் செலுத்தவும் முடியும். கடனட்டையை வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரேயொரு குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலை மட்டுமோ அல்லது டிசம்பர் மாதத்தில் அவர் செலவிட்ட முழுத் தொகையையுமோ இந்த இலகு திட்டத்திற்குள் உள்வாங்கிக் கொள்ளலாம். அதன்மூலம் ஒருவர் தன்னுடைய சுய இயலுமைக்கு அமைவாக குறிப்பிட்ட தொகையை செலுத்தும் சௌகரியத்தை அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். 
 
செலான் வங்கியின் அட்டைகள் பிரிவு பிரதம முகாமையாளரான நிமேஷ் பெர்ணான்டோ கூறுகையில், 'டிசம்பர் பண்டிகைக்காலத்தில் எமது வாடிக்கையாளர்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். இது வெறுமனே ஒரு வெகுமதி மட்டுமன்றி, மிக அதிகமாக செலவளிக்கும் மாதம் ஒன்றிற்குப் பிறகு ஒருவர் தனது நிதி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது பற்றிய நடைமுறையுமாகும். எனவேதான், எமது வாடிக்கையாளர்கள் டிசம்பர் மாதத்தில் கடனட்டை மூலம் செலவிடும் தொகையை  12 மாதங்களைக் கொண்ட ஒரு இலகு தவணை முறைமையின் அடிப்படையில்- அதுவும் வெளிப்படையாக அறவிடப்படும் மிகக் கவர்ச்சியான வட்டியுடன் மீளச் செலுத்த வசதியளிக்கும் ஒரு வெகுமதித் திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள எமது அழைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
 
வருடத்தின் இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பண்டிகைக்கால பொருட் கொள்வனவானது, புதிய பாடசாலை கல்வி ஆண்டுக்காக தயாராகின்ற கொள்வனவுகளையும் உள்ளடக்கி இருக்கின்றது. இதனை மனதிற் கொண்டு செலான் கடனட்டை ஆனது, DSI மற்றும் சரசவி புத்தக நிலையம் ஆகியவற்றிலும் வெகுமதிகளை விஸ்தரித்துள்ளது. இவ் விற்பனை நிலையங்களில் பாடசாலைச் சிறார்களை இலக்காகக் கொண்டு 20% விலைக் கழிவு வழங்கப்படும். 
 
செலான் வங்கியின் தனிநபர் வங்கியியல் பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளரான திஸ்ஸ நாணயக்கார கூறுகையில், 'செலான் வங்கியின் கடனட்டை இன்று அதிகளவான இலங்கையரைப் பொறுத்தமட்டில் 'அது இன்றி எதுவுமே செய்யமுடியாத' ஒரு கருவியாக மாற்றமடைந்துள்ளது. அந்தக் கடனட்டையை நாம் இப்போது விலைக் கழிவுகள், கொள்வனவுச் சலுகைகள் மற்றும் வெகுமதிகளுடன் ஒன்றுசேர்த்துள்ளோம். இவையனைத்தும், கடனட்டையை நாளாந்தம் தமது கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்துகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களிடையே அதனது பெறுமதியை மேம்பாடடையச் செய்யும். இலங்கை முழுவதும் திருப்தியுற்ற பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்கின்ற செலான் குடும்பத்தின் ஒரு அங்கமாக அவ் வாடிக்கையாளர்கள் அனைவரும் திகழ்கின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .