2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மைக்ரோ சொவ்ட் கல்வி உலகளாவிய மன்றத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


மைக்ரோசொவ்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014இனால் உலகம் முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட 23,000 ஆசிரியர்களில் வகுப்பறைக்கான புத்தாக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்கான நிகழ்வு ஸ்பெய்னின் தலைநகரான பார்சிலோனாவில் கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த ஷிரோமா வீரதுங்க மற்றும் கண்டி மாதிரிப்பள்ளியைச் சேர்ந்த சம்பா ரத்நாயக்க ஆகியோரே சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள் ஆவர்.

'மைக்ரோசொவ்ட்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014'இல் பங்குபற்றிய ஷிரோமா வீரதுங்க மற்றும் சம்பா ரத்னாயக்க ஆகிய இரு ஆசிரியைகளும் தாங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இலங்கையிலுள்ள 300 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செயன்முறை தொடர்பான திட்டங்கள் தொடர்பில் கடந்த வருடம் கல்வித் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளதுடன், அதற்கான அங்கீகாரம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை மைக்ரோசொவ்ட் இலங்கை நிறுவனமும் கல்வி அமைச்சும் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 150 அரசாங்க கல்வி அதிகாரிகளும் 260 புத்திஜீவிகள் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள 100 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 300 பாடசாலை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

தமது தெரிவு குறித்து கருத்து தெரிவித்த எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரி ஆசிரியை சம்பா ரத்னாயக்க, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கை சிறப்பாக இல்லாத போதிலும் இலங்கையின் கல்வி முறையின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்குமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும். ஏனெனில் பெரும்பாலான மாணவர்களிடம் தனிப்பட்ட கணினி பாவனை உள்ளது. அதனால் தற்போது கரும்பலகையையும், வெண்கட்டியையும் ஒருபுறம் தள்ளிவிட்டு கணினி மவுசையும், தட்டெழுத்துப் பலகையையும் மேலே கொண்டுவரும் காலம் வந்துள்ளது என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .