2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேயிலை சந்தைப்படுத்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இரு முகவர்கள் தெரிவு

A.P.Mathan   / 2014 ஜனவரி 06 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேயிலை தொழிற்துறையை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்தும் வகையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விளம்பர பிரசார முகவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் இறுதிக்கட்டத்தை எய்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நான்கு விளம்பர முகவர் நிறுவனங்களிலிருந்து, இரண்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. இதில் ஒரு நிறுவனம் விளம்பர பிரசார நடவடிக்கைகளை கையாளவுள்ளதுடன், மற்றைய நிறுவனம் பொது உறவுகள் செயற்பாடுகளை கையாளவுள்ளது.
 
இந்த செயற்திட்டம் 2012ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட எதிர்பார்க்கப்பட்ட போதிலும், குறித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முகவர் நிறுவனங்கள் தெரிவுக்குழுவினரை தமது ஆக்கங்களின் மூலம் திருப்திப்படுத்தியிருக்கவில்லை. 
 
இதனைத் தொடர்ந்து மீண்டும் குறித்த முகவர் நிறுவனங்கள் தமது ஆக்கங்களை சமர்ப்பித்ததை தொடர்ந்து, இந்த செயற்பாடு நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .