2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மிளகு ஏற்றுமதி அதிகரிப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 13 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகின் அளவு 18,500 தொன்களாக பதிவாகியிருந்ததாகவும், இது 2012ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த மொத்த ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் சடுதியான அதிகரிப்பு எனவும் வாசனைத் திரவியங்கள் மற்றும் அதுசார்ந்த உற்பத்திப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் மொத்தமாக 10,500 தொன் மிளகு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இந்த கணிப்பீடுகளுக்கு அமைவாக 2013ஆம் ஆம் ஆண்டில் நாம் மொத்தமாக 20,000 தொன் மிளகை ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும் என சம்மேளனத்தின் தாபக தலைவர் குலாம் சத்தூர் தெரிவித்தார். இலங்கையின் பிரதான மிளகு ஏற்றுமதி நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகள் திகழ்கின்றன.

காலநிலை, உரங்களின் முறையான கையாள்கை, உற்பத்தியாளர்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்த சிறந்த விலைகள், பயிர்ச்செய்கையில் அதிகரிப்பு மற்றும் விவசாய ஏற்றுமதி திணைக்களத்தின் மூலம் கிடைத்த ஊக்குவிப்புகள் போன்றன இந்த சாதனை மிகுந்த பெறுமதியை எய்த காரணங்களாக அமைந்திருந்தன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .