2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'அல்பா' விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்கள் அதியுயர் பாதுகாப்பை வழங்குகின்றன

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நீண்ட அனுபவத்துடன், பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகித்துவருகின்ற அல்பா இன்டஸ்ரிஸ் குறிப்பாக இரவு வேளைகளில் பணக் கொடுக்கல்-வாங்கல்களை மேற்கொள்கின்ற வியாபார நிறுவனங்களுக்கு இரவுப்பொழுதில் பணத்தை பாதுகாப்பாக வைத்துப் பேணுவதற்கு உதவுகின்ற பல்வேறு விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்களை சந்தைப்படுத்துகின்றமை தொடர்பில் அறிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தமது பணத்தை பாதுகாப்பாக வைத்துப் பேணுவதற்கு மிகவும் உகந்த ஒரு தெரிவாக அல்பா விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைந்துள்ளன. பணத்தை இலகுவாக இடுவதற்கு வசதியாக அல்பா விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்களின் ஒரு பகுதி கட்டடத்திற்கு வெளியில் தெரியக்கூடியதாக தனித்துவமான முறையில் இவை வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இடப்படுகின்ற பணம் கட்டடத்தின் உள்ளே மிகவும் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான பாதுகாப்புப் பெட்டகத்தைச் சென்றடைகின்றது. விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகம் பிரதானமாக தற்காலிகமாக பணத்தைப் பாதுகாப்பாக வைத்துப் பேணும் ஒரு வழிமுறையாகும். பாதுகாப்பு மற்றும் கொள்ளளவு ஆகியன காரணமாக இங்கு சேகரிப்படுகின்ற பணம் மறு நாள் இங்கிருந்து அகற்றப்பட்டு பாரிய பாதுகாப்புப் பெட்டகத்திற்கு மாற்றப்படுதல் வேண்டும்.

அல்பா விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்கள் தொடர்பில் அல்பா இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் காட்சியறைப் பிரிவின் விற்பனை முகாமையாளரான ரதிக அமரசிறி அவர்கள் கூறுகையில் 'நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இரவில் வியாபாரத் தொழிற்பாடுகளுடன் பாரியளவிலான பணத்தைக் கையாளுகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற வியாபார நிறுவனங்கள் குறிப்பாக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன. எரிபொருள் நிரப்பு நிலையங்கள், ஆபரண விற்பனைக் காட்சியறைகள், கடைகள் போன்றவற்றில் பல இலட்சக் கணக்கான பணம் ஆயுதமுனையில் கொள்ளையிடப்படுகின்ற செய்திகள் அடிக்கடி வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் வியாபார நிறுவன உரிமையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், தமது வியாபார நிறுவனங்களும், ஊழியர்களும் எதிர்கொள்கின்ற ஆபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை கைக்கொள்வது மிகவும் அவசியமாகும்' என்று குறிப்பிட்டார்.

அல்பா விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றைப் பொருத்திக் கொள்கின்றமை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு முதலீடாகக் காணப்படுகின்றது என்று ரதிக அவர்கள் குறிப்பிட்டார். 'எரிபொருள் நிரப்பு நிலையத் தொழிற்பாட்டாளர்கள் எந்நேரத்திலும் அதிகளவான பணத்தை தம்முடன் வைத்திராது பாதுகாப்பாகப் பேணுவதை இந்த பாதுகாப்புப் பெட்டகங்கள் உறுதிசெய்கின்றன. மேலதிக பணத்தை அவர்கள் இந்த பாதுகாப்புப் பெட்டகத்தினுள் வைப்புச் செய்து வாடிக்கையாளர்களுடனான கொடுக்கல்- வாங்கல்களை மேற்கொள்ளப் போதுமான அளவில் ஒப்பீட்டளவில் சிறிதளவு தொகையான பணத்தை மட்டும் தம்முடன் வைத்திருக்கும் வசதியையும் அவர்களுக்கு வழங்குகின்றது.' எரிபொருள் நிரப்பு நிலையத் தொழிற்பாட்டாளர்கள் சிறு தொகை பணத்தை மட்டும் தம்முடன் வைத்திருக்கும் சந்தர்ப்பங்களில் கொள்ளையர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைக்கும் சந்தர்ப்பங்களும் கணிசமாகக் குறைவடையும் என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார். 'ஆகவே, இந்த விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்கள் இரு வழிகளில் பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் வழங்குகின்றன. அதாவது பணத்தைப் பாதுகாப்பாக வைத்துப் பேணவும், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் கொள்ளையர்களிடமிருந்து எதிர்கொள்கின்ற ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளவும் உதவுகின்றது' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

விசேட இரவுப் பாதுகாப்புப் பெட்டகங்களுக்குப் புறம்பாக வங்கிகள், காசாளர், தரவு, இல்லங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற தேவைகளுக்கான பல்வேறு வகைப்பட்ட பாதுகாப்புப் பெட்டகங்களுடன் உலகத்தரம்வாய்ந்த பாதுகாப்புப் பெட்டகங்களையும் அல்பா இன்டஸ்ரிஸ் உற்பத்தி செய்துவருகின்றது. இந்த உற்பத்திகள் அனைத்தும் தீயினால் பாதிப்பு ஏற்படாதவையாகவும், சர்வதேச அங்கீகாரச் சான்றான Universal ஆய்வுகூடத்தின் அதியுயர் பாதுகாப்பு, சிறந்த தரம் மற்றும் உலகத்தரம்வாய்ந்த பூட்டுக்கள் என்ற தரப்படுத்தல் சான்றையும் கொண்டுள்ளன.

1963 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட அல்பா இன்டஸ்ரிஸ் நிறுவனம் Finco கூட்டு நிறுவனங்களின் ஒரு துணை நிறுவனமாகும். தனது ஆரம்பகாலங்களில் உருக்கிலான அலுவலகத் தளபாடங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருந்த Finco கூட்டு நிறுவனங்கள் அதன் பின்னர் சர்வதேச மற்றும் உள்நாட்டு தர நடைமுறைகளுக்கு அமைவாக அனைத்து வகைப்பட்ட பாதுகாப்பு உற்பத்திகளுக்கும் தனது தொழிற்பாடுகளை விஸ்தரித்துக்கொண்டது. அத்துடன் இன்று வரை சந்தை முன்னோடியாகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் உருக்கு, மெலமைன் மற்றும் மரத்தினால் ஆன அலுவலக தளபாடங்களை உற்பத்தி செய்வதிலும் கால்பதித்துள்ள இந்நிறுவனம் உள்ளக வடிவமைப்பு தயாரிப்புச் செயற்திட்டங்களையும் மேற்கொண்டுவருகின்றது. தற்போது 3 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 650 வரையானோர் பணியாற்றிவருகின்றனர். நிறுவனம் அண்மையில் தமது காட்சியறைகளில் வீட்டுப் பாவனைக்கென வடிவமைக்கப்பட்ட தளபாடங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .