2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொடர்ச்சியான பங்கு விற்பனை காரணமாக ரூபாவின் பெறுமதி உறுதி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டவர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனையின் காரணமாக புதன் கிழமை நாணயமாற்று விகிதங்களின் போது ரூபாவின் பெறுமதி உறுதியடைந்து காணப்பட்டதாக தனியார் நாணயமாற்று முகவர்களும் விற்பனையாளர்களும் தெரிவித்திருந்தனர்.

தற்போது காணப்படும் குறைந்த வட்டி வீதங்களின் காரணமாகவும், எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புதுவருட கொண்டாட்டங்களை முன்னிட்டு அதிகளவு இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையை இலங்கை எதிர்நோக்கும் என்பதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தின நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 130.82/85 ஆக அமைந்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .