2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வரட்சியான காலநிலையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மலையகம் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால் தேயிலை உற்பத்தி 50 வீதத்தால் சரிவடைந்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெருமளவான சிறு தோட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இந்த நிலைமையின் மூலம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அவர்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் தயாராகவுள்ளதாக பெருந்தோட்டத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாக வரட்சியான காலநிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக தேயிலைத் துறையை சேர்ந்தவர்கள் பெருமளவான அசௌகர்யங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தேயிலை ஏல விற்பனையில் இலங்கைத் தேயிலைக்கு சிறந்த கேள்வியும், உயர்ந்த விலை கோரலும் காணப்படும் நிலையில், இந்த உற்பத்தி பாதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை 2014ஆம் ஆண்டுக்கான தேயிலை உற்பத்தி இலக்கும் எய்தப்பட முடியுமா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .