2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ராணி சந்தன சோப் பாவனையாளர்களுக்கான தங்கப் பரிசுப் போட்டி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}



மாதாந்தம் தங்க நாணயங்களையும், வாராந்தம் ராணி அன்பளிப்பு பொதிகளையும் வெல்ல வாய்ப்பு

புது வருடத்தில் ராணி சந்தன சோப் வாடிக்கையாளர்களை தங்கப்பரிசு மழையால் நனைய வைக்கும் புதிய மற்றுமொரு ஊக்குவிப்புத்திட்டத்தை சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி அறிமுகம் செய்துள்ளது.

ராணி சோப் பாவனையாளர்கள் தமது பெயர் முகவரி உள்ளடங்கிய விபரங்களை வெற்று ராணி சந்தன சோப் அல்லது ராணி வெள்ளை சந்தன சோப் அல்லது ராணி சந்தன சோப் 4 இன் 1 பொதி மேலுறைகளுடன் இணைத்து 'ராணி சந்தன தங்க வசந்தம்' த.பெ.இல. 04, கந்தானை எனும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் 20 தங்க நாணயங்கள் (மாதம் 10) மற்றும் 400 ஆறுதல் பரிசுகள (வாராந்தம் 50) போன்றவற்றை எட்டு வாரங்களுக்கு வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள்.

இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டம் 2014 பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. வாராந்தம் மற்றும் மாதாந்தம் பரிசிழுப்பின் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

சுவதேஷி இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'இந்த ஊக்குவிப்புத் திட்டம் எமது உண்மையான நீண்ட கால வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது. சந்தையில் காணப்படும் தூய்மையான அழகு சந்தன சோப் வகையாக ராணி சந்தன சோப் அமைந்துள்ளது' என்றார்.

'சந்தனம் என்பது, ராணி சந்தன சோப் வகையில் காணப்படும் பிரதான உள்ளடக்கமாக அமைந்துள்ளது. அத்துடன் தூய்மையாக்கலுக்கு அத்தியாவசியமான சேர்மானங்களையும் கொண்டுள்ளது. இது சருமத்தை மென்மையாக்கவும், மிருதுவாக்கவும் பயன்படுகிறது. ஆரோக்கியமான பளபளப்பான மற்றும் துர்மணமற்ற சருமத்தை பேண உதவுகிறது. இந்த சிறப்பமிசங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது' என்றார்.

ராணி சந்தன சோப் என்பது அழகிய பெண்களுடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு ராணி சோப் வகைகளின் சந்தைப்படுத்தல் நாமமாக, 'அழகு ராணிகளின் தெரிவு' என்பது அமைந்துள்ளது.
 
1941ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராணி வர்த்தக நாமம், சந்தன சோப் வகைகள் உற்பத்தில் அசைக்க முடியாத முன்னிலையை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் வரவேற்பைப் பெற்ற தயாரிப்பாக திகழ்கிறது.
 
சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் இலங்கையில் முதல் முறையாக மூலிகை சவர்க்கார உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்த நிறுவனமாக சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் நிறுவனம் திகழ்கிறது. கம்பனியின் புத்தாக்க மற்றும் ஆய்வு அடிப்படையிலான அபிவிருத்தி செயற்பாடுகள், சந்தையில் பல புதிய தயாரிப்புகளை முதன் முதலில் அறிமுகம் செய்ய ஏதுவாக அமைந்திருந்தன. இதில் ராணி சந்தன ஷவர் ஜெல் மற்றும் கொஹோம்ப ஹேர்பல் ஷவர் ஜெல் ஆகியவற்றை குறிப்பிட முடியும்.

கம்பனி முதலாவது ஹேர்பல் பேபி சோப் வகையையும், குழந்தைகள் பராமரிப்பு தெரிவுகளையும் கொஹோம்ப வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகம் செய்திருந்தது. அது போலவே 'லேடி' நாமத்தில் நறுமணம் நிறைந்த பேர்ஃபியும் வகைகளையும் அறிமுகம் செய்திருந்தது.

சுவதேஷி மூலம் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் 'அப்சரா வெனிவெல், சேஃப் ப்ளஸ், பேர்ள்வைட், லக் பார், ப்ளு டயமன்ட், லேடி, ப்ளாக் ஈகிள் மற்றும் புதிய சிறுவர் தெரிவாக லிட்டில் ப்ரின்சஸ்' ஆகியன உள்ளடங்கியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .