2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

எச்சரிக்கை படங்களை பொறிப்பது தொடர்பில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் நிலைப்பாடு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிலை உற்பத்தி பொதிகளில் எச்சரிக்கை படங்களை பொறிப்பது தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சரின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு 2014 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு சட்டக் கோவை 27ஆம் இலக்க சரத்துக்கு அமைவாக, அமைச்சரின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட விதிமுறை மாற்றங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 30 தினங்களுக்குள் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாக அமைந்துள்ளது.

இந்த ஒழுங்குவிதிமுறைகள் குறித்து சிலோன் டொபாக்கோ கம்பனி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி தீர்மானம் வழங்கும் தினத்தை 2014 மே மாதம் 12ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒதுக்கி வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் மூலமாக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவுக்கு அமைவாக விதிமுறைகளில் மாற்றங்களை செயற்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு செல்லுபடியாகும் என்பதை நாம் உறுதி செய்வதுடன், விதிமுறைகளுக்கு அனுமதி வழங்குவது என்பது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் சட்ட விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். எனவே சிலோன் டொபாகோ கம்பனி, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குறித்த விதிமுறைகள் தொடர்பில் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என சிலோன் டொபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது.

தமது பொதிகளில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தாமல் வழமை போல சிகரெட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நடவடிக்கைகளை சிலோன் டொபாக்கோ கம்பனி முன்னெடுக்கும் என அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .