2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டெட்டோல் முன்னெடுக்கும் 'சுகாதாரத்துக்கான குறிக்கோள்'

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முதற்தர வீட்டுச் சுகாதார தயாரிப்பான டெட்டோல், அண்மையில் கொழும்பில் 'சுகாதாரத்துக்கான குறிக்கோள்' எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார். மேலும் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சுதர்ஷனி பெர்னான்டோப்புள்ளே ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். டெட்டோல் சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டத்தின் அறிமுக நடைபவனி விசேட அழைப்பாளர்களின் பங்குபற்றலுடன் கொழும்பு 02 முத்தையா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பித்து விஹாரமகாதேவி திறந்தவெளி அரங்கிற்கு சென்றடைந்து அறிமுக நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

இந்த சுகாதார அறிமுக நிகழ்வில் ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் வர்த்தக பணிப்பாளர் சின்கிளாயர் க்ரூஸ் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் டெட்டோல் தயாரிப்புக்கு இதுவொரு மறக்கமுடியாத நிகழ்வாகும். இந்த திட்டத்தின் மூலம் இலங்கையரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நடைமுறைகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்து வருவதனூடாக சமூகத்திற்கும், தேசத்தின் சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளுக்குமான எமது வலுவான வாக்குறுதியை நிறைவேற்றி வருகின்றோம். கிருமிகள் இல்லாத இலங்கையை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவினை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்' என தெரிவித்தார். 

2014 ஆம் ஆண்டு டெட்டோல் சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டத்தின் கீழ், 32,500 பள்ளி மாணவர்கள், 25,000 புதிய தாய்மார்கள், 2,000 தாதிகள் மற்றும் 1,500 உணவு கையாளர்களுக்கு சிறந்த ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமான பழக்கவழக்கங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மாபெரும் திட்டத்திற்கு முன்னதாக, கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இதையொத்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மைகளை பெற்றனர். இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு பெரும்பாலான மக்களுக்கு அனுகூலங்களை வழங்கும் நோக்கில் டெட்டோல் மூலம் சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் மோசமான சுகாதாரம் மற்றும் சுகாதாரமற்ற பழக்கங்கள் மூலம் மில்லியன் கணக்கான குழந்தைகள் நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை உலகளாவிய ஆராய்ச்சிகளினூடாக கண்டறிந்த ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முயற்சியின் காரணமாகவே டெட்டோல் சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெட்டோல் வர்த்தகநாமமானது, தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகளின் ஆதரவு மற்றும் வழிகாட்டல்களுடன் கிராமிய மற்றும் நகர்புறங்களில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. பாடசாலை மட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் சிறந்த கை சுகாதார பழக்கங்கள் மற்றும் மகப்பேற்று கிளினிக்குகளில் புதிய அன்னையரிடையே மகப்பேற்றின் பின்னரான தூய்மையின் அவசியம் குறித்து விழிப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் தாதிகளுக்கு பயிற்சிகளும், உணவுகளை தயார்படுத்தும் போது ஆரோக்கியமானதும், தூய்மையானதுமான பழக்கங்கள் பின்பற்றுவதை விழிப்பூட்டும் வகையில் உணவு கையாளர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் டன்சீம் ரெஸ்வான் கருத்து தெரிவிக்கையில், 'வீட்டுச் சுகாதார தரத்தினை மேம்படுத்துவதில் நுகர்வோர் சந்தைகளில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய உலகளாவிய பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு முயற்சிகளுள் ஒன்றாக சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டம் விளங்குகிறது. சர்வதேச வர்த்தகநாமம் எனும் ரீதியில் டெட்டோல், இலங்கை நுகர்வோருக்கு பெறுமதி சேர்க்கும் முயற்சிகளுக்காக தம்மை அர்ப்பணித்துள்ளது' என்றார். மேலும் அவர் இந் நிகழ்வில் பங்குபற்றி இலங்கையில் சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டத்திற்கான தமது ஆதரவினை விஸ்தரித்துக்கொண்ட சுகாதார அமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந் நிகழ்வின் இறுதியில் சிறந்த வீட்டு சுகாதார பழக்கங்கள் குறித்து விழிப்பூட்டும் வகையிலும், கிருமிகளிலில்லாத இலங்கையை கட்டியெழுப்பும் வகையிலும் பொதுமக்களிடமிருந்து ஆயிரம் கையொப்பங்களை பெறும்நோக்கில் நாடுமுழுவதும் செல்லவுள்ள உறுதிமொழி பலகையை டெட்டோல் அறிமுகம் செய்துவைத்தது. இம் முயற்சிக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில், பெறப்படும் கையொப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுபூராகவும் உள்ள அனாதை இல்லங்களுக்கு டெட்டோல் சவர்க்கார பொதிகள் வழங்கப்படவுள்ளன என ரெக்கிட் பென்கீசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெட்டோல் சுகாதாரத்துக்கான குறிக்கோள் திட்டமானது மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இலங்கையருக்கு அனுகூலங்களை வழங்கும் வகையில் நாடுமுழுவதும் செல்லவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .