2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் அலியான்ஸ் காப்புறுதி நிறுவன கிளை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


ஜேர்மன் நாட்டை தலைமையகமாகக் கொண்ட அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் யாழ்ப்பாணத்திற்கான 3ஆவது கிளை இன்று (25) காலை நாவலர் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி சுரேக்கா அயங்கரி அலஸ் இந்தக் கிளையினைத் திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்படி நிறுவனத்தின் கிளைகள் திருநெல்வேலி, யாழ்.நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிறுவனக் கிளைகளின் முகாமையாளர்கள், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .