2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் வருடாந்த ஊழியர் விருதுகள் வழங்கும் நிகழ்வு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் கட்டுமான தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ஹொல்சிம் லங்கா லிமிடெட் (HLL), சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களை அடையாளப்படுத்தும் வகையில் வருடாந்த ஊழியர் விருதுகள் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. ஹொல்சிம் நாட்காட்டியின் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் 'சுப்பிரி விருதுகள்' வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த விருதுகள் நிகழ்வானது ஹொல்சிம் லங்கா ஊழியரிடையே மாத்திரமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிக விசேட நிகழ்வாக கருதப்படுகிறது.

ஹொல்சிம்(லங்கா) லிமிடெட்டின் நிறுவன அபிவிருத்தி மற்றும் ஈடுபாட்டு பிரிவின் முகாமையாளர் வெனுர பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'ஹொல்சிம் லங்கா ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தம்மை அர்ப்பணித்துள்ளது. பல தரப்பட்ட முயற்சிகளினூடாக நிறுவனத்தின் செயற்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஹொல்சிம் ஈடுபட்டு வருகிறது' என தெரிவித்தார்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வணிக செயல்பாட்டிற்கு பங்கங்காற்றிவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பெறுமதியான வெளிநாட்டு சுற்றுலாக்கள், தங்க நாணயங்கள், கேடயங்கள், கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசில்கள் போன்றன வழங்கப்பட்டன. தொழிற்துறையில் முன்னணி அமைப்பாக உருவாகுவதற்கு மக்கள் மற்றும் சுப்பிரி விருதுகள் நிகழ்வில் முதலீடுகளை மேற்கொள்வதில் ஹொல்சிம் லங்கா நம்பிக்கை கொண்டுள்ளது.

இந் நிகழ்வில் சுப்பிரி விருது(தங்கம், வெள்ளி, வெண்கலம்), மிகச்சிறந்த விற்பனை நபர்  நாடளாவிய ரீதியில், சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் விருது, சிறந்த பிரதேச விற்பனை அதிகாரி விருது, சிறந்த புதிய சிந்தனை விருது(தனிநபர் மற்றும் குழு பிரிவு), செயற்பாட்டு நட்சத்திர விருது (தனிநபர் மற்றும் குழு பிரிவு), பாதுகாப்பு விருது(தங்கம், வெள்ளி,வெண்கலம்), பசுமை விருது(தனிநபர் மற்றும் குழு பிரிவு) மற்றும் விசேட மெரிட் விருது(தனிநபர் மற்றும் குழு பிரிவு) போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.

இவ் வருடம் தேர்வுக் குழுவில் டாக்டர்.அஜந்த தர்மசிறி (ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் Postgraduate Institute of Management இன் சிரேஷ்ட ஆசிரிய உறுப்பினர் மற்றும் நிர்வாக ஆலோசகர்/ தேர்வுக்குழு தலைவர்), கவிந்த டி சொய்சா - உப தலைவர் (City Bank -  கூட்டாண்மை மற்றும் முதலீட்டு வங்கி பிரிவு), மகேஷ் பெரேரா -Modern Trade தலைவர் (மலிபன் பிஸ்கட் மனுபக்டரிஸ்), சுரன்ஜித் கொடகம - உதவி பொது முகாமையாளர் Learning & Development and Special Projects - யூனியன் அஷ்யூரன்ஸ், மலிக் டி சில்வா - குழும நிதி முகாமையாளர்(ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி) மற்றும் பிரசாத் பியடிகம - உப தலைவர்-மனித வளங்கள் (ஹொல்சிம் (லங்கா) லிமிடெட்) போன்ற இலங்கையின்; கூட்டாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் இறுதி முடிவுகள் மற்றும் விருதுகளை தேர்ந்தெடுக்கும் முறைமை பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றன. இதன் போது புத்தாக்கம் மற்றும் முயற்சி, வெற்றிகரமான செயலாக்கங்கள், செலவு சேமிப்பு சதவீதம்/ மேலதிக மதிப்பு, பேண்தகைமை மற்றும் மாறும் மேலாண்மை, தலைமைத்துவ செயல்முறை, அறிவு பரிமாற்றம், செயற்பாட்டு பங்களிப்பு மற்றும் இதர பிரிவுகளுக்கான ஊழியர்களின் பங்களிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 220 ஐ தாண்டியதுடன், நிறுவனத்தினுள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் அபரிபிதமான அதிகரித்திருந்தது. ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்கு மேலதிகமாக, ஹொல்சிம் லங்கா நிறுவனம் சுப்பிரி விருதுகள் போன்ற மாபெரும் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .