2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

செலான் வங்கியின் 'திலின சயுர' திட்டம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது தனது 'திலின சயுர' (Thilina Sayura) ஊக்குவிப்புத் திட்டத்தை மேலும் பல்வேறு வகையான கவர்ச்சிகரமான அனுகூலங்கள் மற்றும் வெகுமதிகளுடன் அண்மையில் மீள அறிமுகம் செய்துள்ளது.

'அதிகமாக சேமிக்கும் ஒரு நபர் அதிகமாக வெற்றி பெறுவார்' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த ஊக்குவிப்பு திட்டம் செயலாற்றுகின்றது. NRFC/RFC சேமிப்பு கணக்குகள் அல்லது நிலையான வைப்புக்களில் 500 அமெரிக்க டொலர் (அல்லது நிர்ணயிக்கப்பட்ட நாணயமொன்றில் அதற்கு சமமான தொகை) இனை ஆகக் குறைந்த நிலுவையாக பேணி வருகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் பணவெகுமதி ஆகியவற்றை வழங்கும் விதத்தில் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாக இது காணப்படுகின்றது. கணக்கு மீதிகள் அதிகரித்துச் செல்கின்ற வேளையில் வெகுமதிகளும் அதிகரிக்கின்றமையால், இந்த ஊக்குவிப்புத் திட்டம் மேலும் அதிகமான மனமகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

கணக்கு மீதியானது 25,000 முதல் 50,000 அமெரிக்க டொலராக பேணப்பட்டால், தெரிவு செய்யப்பட்ட பங்காளித்துவ ஹோட்டல்களில் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய விதத்தில் இருவர் ஒரு முழு நாளையும் (ஒரு முழு இரவு) கழிப்பதற்கான வாய்ப்பை வெகுமதியாக பெறலாம். அதேபோல் கணக்கு நிலுவை 50,000 இற்கு மேற்பட்ட அமெரிக்க டொலராக காணப்பட்டால், அனைத்துச் செலவுகளும் உள்ளடங்கியவாறு இரு நபர்கள் இரண்டு இரவுகள் மேற்படி ஹோட்டல்களில் தங்குவதற்கான வெகுமதி கிடைக்கும். செலான் வங்கியின் விஷேட வெளிநாட்டு நாணய முதலீட்டு வைப்புக் கணக்கில் (SFIDA) முதலீடு செய்கின்ற வாடிக்கையாளர்களும் பயன்பெறக் கூடியவாறு இந்த ஊக்குவிப்புத் திட்டம் மேலும்  விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி 'திலின சயுர' திட்டம் ஒருவரது வாழ்க்கையின் இடம்பெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும், அதாவது – திருமணம், குழந்தை ஒன்றின் பிறப்பு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளல் மற்றும் 'கட்ரெக்' சத்திரசிகிச்சை போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வெகுமதிகளை அளிக்கின்றது.

'திலின சயுர' கணக்கு வைப்பாளர்கள் அனைவரும் திருமணத்தின் போது ரூபா 40,000 வரையான பண வெகுமதியையும் குழந்தை ஒன்று பிறக்கின்ற வேளையில் ரூபா 35,000 வரையான பண வெகுமதியையும் பெற்றுக் கொள்வர். இதற்கு இன்னுமொரு படி மேலே சென்று சம்பந்தப்பட்ட கணக்கு வைப்பாளர்கள் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சத்திர 'சிகிச்சை ஒன்றுக்கு உட்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ரூபா 100,000 வரையான தொகையையும்; 'கட்ரெக்' சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் வேளையில் ரூபா 25,000 வரையான தொகையையும் பண உதவியாக அளிக்கின்றது. அதேவேளை, கணக்கு வைப்பாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் செல்கின்ற நேரத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) கட்டணமாக செலவிடும் ரூபா 10,000 வரையான தொகையை வங்கியிடமிருந்து திருப்பிப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

'திலின சயுர' இதற்கு இன்னுமொரு படி மேலே சென்று, வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் பேணுகின்ற நிலுவைத் தொகையின் அடிப்படையில் ரூபா 1,000,000 வரைக்குமான ஆயுள் காப்புறுதி வசதியையும் தன்னுடன் கொண்டு வருகின்றது. பெருமளவிலான அனுகூலங்களுக்கு மேலதிக இணைப்பாக செலான் வங்கியின் கணக்கு வைப்பாளர்களுக்கு விஷேடமாக வடிவமைப்பு செய்யப்பட்ட கடன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை கணக்கில் பேணப்படுகின்ற ஆகக் குறைந்த மீதியை அடிப்படையாகக் கொண்டு, ரூபா 1 மில்லியன் வீடமைப்புக் கடன் வசதி மற்றும் ரூபா 10 மில்லியன் வர்த்தக கடன் வசதி போன்றனவும் இப்போது கிடைக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, வதியாதோர் வெளிநாட்டு நாணய (NRFC) கணக்கில் உள்ள தொகையில் 90மூ வரையான தொகையை இலங்கை ரூபாவில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் உடனடி கடனாக பெறும் வசதியும் இதில் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (சர்வதேசம்) திரு. அருண ரணசிங்க கூறுகையில், 'திலின சயுர ஒரு தனிச் சிறப்புவாய்ந்த திட்டம் மட்டுமன்றி இலங்கையின் வங்கியியல் துறையில் நடைமுறையில் உள்ள ஒரேயொரு திட்டமாகும். இது ஒரு சீட்டிழுப்பு அல்ல, மாறாக ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு மேற்கூறிய சந்தர்ப்பத்தில் பண உதவி கிடைப்பதை உறுதிசெய்கின்ற ஒரு திட்டமாகும். கடந்த மூன்று வருட காலத்தில் இலங்கையில் இருந்து புலர்பெயர்ந்து வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் வெளிநாடு செல்வது இப்போது புதிய போக்காக மாறியிருக்கின்றது. பொறுப்புணர்வுமிக்க கூட்டாண்மை பிரஜை என்ற வகையில், எமது புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்ற வருமானத்திற்கு சாத்தியமானளவுக்கு சிறப்பான அனுகூலங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்' என்றார்.

மேலதிகமாக வழங்கப்படுகின்ற வசதிகளுள் - NRFC பண அட்டையும் ஒன்றாகும். ஒருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர் ஒருவர் மாதந்தோறும் நிலையான தொகை ஒன்றை மீளப் பெற்றுக்கொள்ள இது இடமளிக்கின்றது. அதேவேளை NRFC /RFC கணக்கு வைப்பாளர் ஒருவர் ரூபா 500 வைப்புச் செய்யப்பட்ட இலவச 'டிக்கிரி' கணக்கு ஒன்றை பெறுவதற்கும் உரித்துடையவராகின்றார். தனது பிள்ளைக்காக இக்கணக்கை அவர் திறக்க முடியும்.

மேலும், உலகெங்கும் உள்ள எந்தவொரு VISA சான்றளிக்கப்பட்ட ஏ.ரி.எம். நிலையம் அல்லது வர்த்தக நிலையத்திலும் விசா வரவு அட்டையை பயன்படுத்துவதன் ஊடாக வாடிக்கையாளர்கள் தம்முடைய NRFC கணக்குகளை செயற்படுத்திக் கொள்ள முடியும். செலான் வங்கியின் இணையவழி வங்கிச் சேவையனது வாடிக்கையாளர்கள் தமது கணக்கு நிலுவைகள், கொடுக்கல் வாங்கல்களை பார்ப்பதற்கும் வங்கிக்கு அறிவுறுத்தல்களை பிறப்பிப்பதற்கும் இடமளிக்கின்றது. அதேநேரம், ஒருவரது NRFC கணக்கிலுள்ள நிலுவைத் தொகையை அவரது தெரிவுக்கமைய இன்னுமொரு நிர்ணயிக்கப்பட்ட நாணய அலகிற்கு இலவசமாக மாற்றிக் கொள்வதற்கான வசதியும் இதில் காணப்படுகின்றது. இவற்றுக்கு மேலதிகமான சிறப்பம்சமாக, வட்டித் தொகையானது நாளாந்த அடிப்படையில் கணிப்பிடப்பட்டு மாதாந்த அடிப்படையில் கணக்கில் வரவு வைக்கப்படுவது மட்டுமன்றி இந்தக் கணக்கு வருமான வரியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகவும் இருக்கும்.

'அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற அடிப்படையில் நாம் மக்களின் இதயத்துடிப்பை உணர்வுபூர்வாக உணர்ந்து கொள்கின்ற அதேவேளை, இலங்கை மக்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புக்களுடன் ஒத்திசைந்து செயற்பட்டு வருகின்றோம். இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் எமது சேவைகளை புத்தாக்கம் செய்வதிலும் மேலும் அதிகமான பெறுமதியை சேர்ப்பதிலும் நாம் தொடர்ச்சியாக முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தற்போதைய சூழலில் 'திலின சயுர' திட்டத்தை மீள அறிமுகம் செய்கின்றமையானது, மக்கள் தொடர்பாக நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இன்னும் ஒருபடி முன்கொண்டு செல்வதாக அமைகின்றது' என்று திரு. ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .