2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமில் இன்டஸ்ரிஸிற்கு விருது

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுழலும்/ தள்ளும் கதவுகள் 2014ஆம் ஆண்டின் சிறந்த படலைக் கதவுகளாக இலங்கை கட்டிடக் கலைஞர்களின் சம்மேளனத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தெரிவுக்கான விருதும் சான்றிதளும், அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹேஷினி அபேசுந்தர அவர்களிடம் மெல்பர்ன் ஸ்கூல் ஒஃவ் டிசைன் பணிப்பாளர் பேராசிரியர். அலன் பேர்த் வழங்கியிருந்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற Architect 2014 கண்காட்சி நிகழ்வில் இந்த சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

அமில் இன்டஸ்ரிஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுழலும்/ தள்ளும் படலைக் கதவுகள், சர்வதேச நிபுணத்துவத்துக்கு அமைவாக, ISO 9001:2008 சான்று தராதரங்களுக்கு அமைய உற்பத்தி செய்யப்படுகின்றன. டிசைனர் சுழலும் / தள்ளும் படலைக்கதவுகள் 100 வீதம் இத்தாலிய உதிரிப்பாகங்களை கொண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரே தயாரிப்பாக திகழ்கிறது.
சர்வதேச ரீதியில் கட்டிடக் கலை நிபுணர்களின் மூலம் பின்பற்றப்படும் நவீன வடிவமைப்புகளுக்கு அமைய காணப்படுவதுடன், உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் அமைந்திருக்கும். இந்த கதவுகளை சுயமாக இயங்கச் செய்வதற்கு அவசியமான மோட்டார் வகைகளை இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற நிறுவனமான GR கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்கிறது. இவை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தெரிந்த இரகசிய குறியீட்டு இலக்கங்களை கொண்டு இயங்க வைக்கக்கூடியனவாக அமைந்துள்ளன. இலங்கையில் GR மோட்டர்ஸ் வகைகளுக்கு இலங்கையில் ஏக விநியோகத்தர்களாக அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனம் செயற்படுகின்றது.

இந்த தன்னியக்க கட்டுப்படுத்திகள் மூலம் இயங்கும் சுழலும் -தள்ளும் படலைக் கதவுகளை இரகசிய குறியீட்டு இலக்கங்களை பயன்படுத்தி, வீட்டினுள் இருந்தவாறே ஒரு பொத்தானை மாத்திரம் அழுத்தி பயன்படுத்த முடியும்.

இந்த சுழலும் -தள்ளும் படலைக் கதவுகள் (தேக்கு அல்லது கும்புக்) மரம் மற்றும் இரும்பை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த கதவுகளுக்கு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கதவும் 'அபாய ஒளி' சமிக்ஞை வசதியுடன் அமைந்துள்ளன.

இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிஹான் அபேசுந்தர கருத்து வெளியிடுகையில், 'இலங்கையில் இந்த தயாரிப்பு மிகவும் குறுகிய காலப்பகுதியில் இந்த உயர்ந்த விருதை பெற்றுக் கொள்ள காரணம், அந்த உயர்ந்த தரம் மற்றும் இத்தாலி நாட்டின் தொழில்நுட்பம் ஆகும். இலங்கை கட்டிடக் கலைஞர்களின் சம்மேளனத்தின் மூலம் 2014ஆம் ஆண்டின் சிறந்த சுழலும் -தள்ளும் படலைக் கதவுகள் உற்பத்தியாளராக நாம் தெரிவு செய்யப்பட்டமை, எமது தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.

'அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனம் 30 வருட கால அனுபவத்தை கொண்டுள்ளது. இந்த புதிய கௌரவிப்பின் மூலம் சந்தையில் மேலும் புதிய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் நலன் கருதி அறிமுகம் செய்ய ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தும் அமில் இன்டஸ்ரிஸ், அவர்களின் தெரிவுகளுக்கு அமைய, தமக்குரிய ரோலர் கதவுகளை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பை அமில் இன்டஸ்ரிஸ் வழங்கியுள்ளது. இதில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் புத்தம் புதிய டிசைன்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்த வகை கதவுகளை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள், மாதிரி வடிவமைப்புகளை www.facebook/AmilGroup எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்).

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகர்யங்களை இலகுவான முறையில் தவிர்த்துக் கொள்ளும் வகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய சகல மாகாணங்களிலும் தனது விற்பனைக்கு பிந்திய சேவை நிலையங்களை கம்பனி நிறுவியுள்ளது. எனவே அமில் இன்டஸ்ரிஸ் வாடிக்கையாளர்கள் 0773 564000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இந்த அனுகூலத்தை அனுபவிக்க முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .