2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகள் திறப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தி

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் மற்றும் கொழும்பு வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலை ஆகியன மார்ச் 15ஆம் திகதி மற்றும் மார்ச் 8ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூலம் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்த இரு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான கட்டண விபரங்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள அரசாங்க வர்த்தமானியில் பிரசுரமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்தான வருமானம் போதியளவில் இல்லை எனவும், இந்த வீதிகளில் பயணிப்பதற்கு அறவிடப்பட்டும் கட்டணமானது, கடந்த ஆண்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 பில்லியன் ரூபாவாகவும், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் 1.3 பில்லியன் ரூபா வரையிலும் திரட்டப்படலாம் என நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்திருந்தார்.

இந்த வருமானம் போதியளவு இன்மையால், பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, திறைசேரியிடமிருந்து தாம் மேலதிக நிதியை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு சீனா பெருமளவு நிதியுதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .