2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் விலையுயர்வுடன் பங்குச்சந்தை மீண்டும் நேர் பெறுமதியில்

A.P.Mathan   / 2014 மார்ச் 07 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் பங்குகளின் விலை உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, பங்குச்சந்தை நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி 700 மில்லியன் ரூபாவை விட அதிகரித்து பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி மற்றும் பீபிள்ஸ் லீசிங் ஆகிய பங்குகளின் மீது மொத்த வியாபாரம் பதிவாகியிருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதியில் இவை இரண்டும் 49 வீதத்தை தமதாக்கியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளை கொள்வனவு செய்வதில் இவர்கள் அதிகளவு ஆர்வம் செலுத்தியிருந்தனர். அலுமெக்ஸ் ஆரம்ப பொது பங்கு வழங்கல் முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்திருந்ததாக பதிவாளர்கள் அறிவித்திருந்தனர்.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் உயர்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தது (பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், கொமர்ஷல் வங்கி வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன்) துறையின் சுட்டெண் 0.22வீத சரிவை பதிவு செய்திருந்தது. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்கின் விலை மாற்றமின்றி 14.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 196,100 பங்குகளால் உயர்ந்திருந்தது. கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்கு மற்றும் வாக்குரிமை பங்கின் விலை முறையே 0.40 ரூபாவால் (0.42%) மற்றும் 0.50 (0.44%) உயர்வடைந்து பதிவாகியிருந்தது. சம்பத் வங்கி பங்கொன்றின் விலை 1.20 ரூபாவால் (0.07%) அதிகரித்திருந்தது.

சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் பன்முகத்துறை இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டி 1.22% வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 5.00 ரூபாவால் (2.27%) அதிகரித்து 225.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 150,737 பங்குகளால் குறைவடைந்திருந்தது.

இதேவேளை நமுனுகுல பிளான்டேஷன்ஸ் பிஎல்சி மற்றும் கேகாலை பிளான்டேஷன்ஸ் லிமிடெட் ஆகியன தமது இரண்டாவது இடைக்கால பங்கிலாபங்களை பங்கொன்றுக்கு 1.50 ரூபா வீதம் அறிவித்திருந்தன. தங்கரீன் பீச் ஹோட்டல்ஸ் பிஎல்சி தமது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.50 ரூபா வீதம் அறிவித்திருந்தன. ரோயல் பாம் பீச் ஹோட்டல் பிஎல்சி தமது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.80 ரூபா வீதம் அறிவித்திருந்தது. புரொப்பர்டி டிவலப்மன்ட் பிஎல்சி தனது முதலாவதும் இறுதியானதுமான பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 3.00 ரூபா வீதம் அறிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .