2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தொழிற்பேட்டைகளுக்கு தீயணைப்பு இயந்திரங்களை வழங்க ஜப்பான் தீர்மானம்

A.P.Mathan   / 2014 மார்ச் 11 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஏற்றுமதி பதனிடல் செயற்பாடுகள் இடம்பெறும் தொழிற்பேட்டைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீயணைக்கும் இயந்திரங்கள் ஐந்தை வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
 
எமது தீ அபாய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தேவை காணப்பட்ட நிலையில், ஜப்பானிய அரசாங்கம் இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளமையானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் லக்ஷ்மன் ஜயவீர தெரிவித்தார்.
 
டோக்கியோ மெட்ரேபொலிஸ் மூலமாக 3 தீயணைக்கும் இயந்திரங்களும், யொகுசுகா சிற்றி மூலம் 1 இயந்திரமும், கசுகபே சிற்றி மூலம் மேலும் ஒரு இயந்திரமும் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. இலங்கையின் தொழிற்பேட்டைகளில் ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த சில நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .