2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கண்டி நகரில் சன்சில்க் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முதற்தர சிகை பராமரிப்பு தயாரிப்பான சன்சில்க் வர்த்தகநாமத்தின் மூலம் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி கண்டி கட்டம்பே மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுவர்ண நிதானய' திறந்தவெளி நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந் நிகழ்வில் சிகை பராமரிப்பு வல்லுநர்கள் மூலம் இலவச சிகை பகுப்பாய்வுகள், தனிப்பட்ட ஸ்டைலிங் ஆலோசனைகள் மற்றும் ஹெயார்கட் போன்றன வழங்கப்பட்டன. பெண்களின் திறனை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சன்சில்க் வர்த்தகநாமத்தினால் வழங்கப்பட்ட சிகை பராமரிப்பு பகுப்பாய்வுகள் மூலம் பெரும்பாலான பெண்கள் அனுகூலங்களை பெற்றுக்கொண்டனர்.

நமது அன்றாட வாழ்வில் சிகை பராமரிப்பிற்கு மிக குறைவாகவே முன்னுரிமை வழங்குகிறோம்.  நாடுமுழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு தொடர்ச்சியாக சிகை பராமரிப்பு தீர்வுகளை வழங்கி அவர்களை ஆரோக்கியமானதும் கவர்ச்சியானதுமான கூந்தலை பேணுவதற்கான ஊக்கப்படுத்தல்களை வழங்குவதே ஹெடகாரி முயற்சியின் எதிர்பார்ப்பாகும்.

'சுவர்ண நிதானய' நிகழ்வு EAP ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஹெடகாரி திட்டத்தில் பங்குபற்றிய அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தினை நாடு முழுவதுமுள்ள பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக இந் நிகழ்ச்சி பற்றிய நேரடி தகவல்கள் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியினூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதான மேடையில் அனைவராலும் நன்கறியப்பட்ட சன்சில்க் ஹெடகாரி சிகை பராமரிப்பு வல்லுநர்கள் மூலம் மொடல் அழகிகளுக்கு ஸ்டைலான ஹெயார்கட்கள் செய்து காட்டப்பட்டன.

ஹெடகாரி காட்சிக்கூடத்தின் மூலம் தமது வாழ்வின் மிக விசேட நாளான திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மணப்பெண்களுக்கு உதவிடும் வகையில், கடந்த ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் BMICH இல் நடைபெற்ற 'விவாஹா 250 மணப்பெண் கண்காட்சி' இன் உத்தியோகபூர்வ சிகை பராமரிப்பு பங்காளராக சன்சில்க் இணைந்து கொண்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .