2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'பத்தும் வாசி' வெகுமதி திட்டம்

A.P.Mathan   / 2014 மார்ச் 19 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதுவருட பருவ காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகளவில் வழங்;கி மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், வீவா 'பத்தும் வாசி' எனும் நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தை வீவா அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக வீவா மோல்ட் சேர்க்கப்பட் ஆகார பான ஊக்குவிப்பு திட்ட பக்கட்டினை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் இருவரில் ஒருவருக்கு 100 K35 டயலொக் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் 7 மில்லியன் ரூபா பெறுமதியான ரீலோட்களையும் வெற்றி கொள்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்கே நிறுவனத்தின் போஷாக்கு பிரிவு முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'வீவா பத்தும் வாசி திட்டத்தின் ஊடாக வீவா பக்கட்களை கொள்வனவு செய்யும் இரண்டில் ஒரு வாடிக்கையாளருக்கு அன்பளிப்பொன்றை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஏனைய ஊக்குவிப்பு திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த திட்டத்தின் ஊடாக வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அதிகளவில் காணப்படுகிறது' என்றார்.

இந்த திட்டத்தின் ஊடாக அனுகூலங்களை பெற விரும்பு வாடிக்கையாளர்கள் 'Viva Pathum Vaasi' என விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள 400g பக்கட் ஒன்றை கொள்வனவு செய்து, அதனுள் காணப்படும் சுரண்டும் அட்டையிலிருந்து தமக்குரிய அன்பளிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். 50 வீதத்துக்கும் மேற்பட்ட சுரண்டும் அட்டைகள் அன்பளிப்பை கொண்டதாக அமைந்திருக்கும். அது ஒரு ஸ்மார்ட் ஃபோனாக இருக்கலாம் அல்லது ரீலோட்டாக இருக்கலாம்.

வீவா வர்த்தக நாமத்தின் முகாமையாளர் மொஹான் கமகே கருத்து தெரிவிக்கையில், 'புதுவருட காலப்பகுதி என்பது அனைவருக்கும் அதிகளவு வேலைப்பளு நிறைந்த காலமாக அமைந்திருக்கும் என நாம் நம்புகிறோம். இந்த காலப்பகுதியில், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு உங்களுக்கு சிறியளவு உதவி தேவைப்படலாம். நாம் அவர்களிடம், வீவா போஷாக்கு பானம் ஊடாக சென்று, இந்த புத்தாண்டு காலத்தில் மகிழ்ச்சியை மேம்படுத்த எண்ணியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் சிறந்த அன்பளிப்பாக இது அமைந்துள்ளது. சமூகத்துக்கு நாம் மீள வழங்கும் முறையாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த புத்தாண்டு காலப்பகுதியில் அவர்கள் அதிகளவு செயலாற்றி, அதிகளவு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்' என்றார்.

'வீவா பத்தும் வாசி' திட்டம் 2014 மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் டயலொக் ஆக்சியாடா இந்த திட்டத்துக்காக வீவா உடன் கைகோர்த்துள்ளது. ரீலோட்களை வெற்றி பெற்ற வாடிக்கையாளர்கள் 123 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, தமக்குரிய ரீலோட் பெறுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் ஃபோன் வெற்றியாளர்கள் தமது கையடக்க தொலைபேசிகளை அருகிலுள்ள டயலொக் ஆர்கேட்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

வீவா மோல்டட் ஆகார பானம் என்பது, மோல்ட் செறிவு நிறைந்ததும், பாலின் நலச்செழுமை மற்றும் போஷாக்குகளையும் கொண்டுள்ளது. உடல் செயற்பாடுகளை இவை அதிகளவில் ஊக்குவிப்பதுடன், சுறுசுறுப்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல அவசியமான சக்தியை வழங்குகிறது.

ஆய்வுகள் அடிப்படையிலான மருத்துவ மற்றும் சுகாதார பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் முன்னணி பல்தேசிய நிறுவனமான க்ளெக்சோஸ்மித்கிளைன் நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றாக வீவா அமைந்துள்ளது. மக்களின் செயற்திறனை அதிகரிப்பது, சுகமாக திகழச் செய்வது மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வது எனும் தனது தொனிப்பொருளுக்கு அமைவாக அர்ப்பணிப்புடன் தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .