2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மூலதனச்சந்தை பற்றிய அறிவை விருத்தி செய்ய திட்டம்

A.P.Mathan   / 2014 மார்ச் 20 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பட்டப்படிப்பை மேற்கொள்வோர் மத்தியில் மூலதனச் சந்தை தொடர்பான அறிவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கொழும்பு பங்குச்சந்தை மற்றும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13,000 ஆசிரியர்களுக்கும் மற்றும் 15,000 பட்டடிப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் மத்தியிலும் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் செயலமர்வுகளை நாடு முழுவதும் முன்னெடுக்க கொழும்பு பங்குச்சந்தை திட்டமிட்டுள்ளது.

இந்த செயலமர்வுகளின் போது சேமிப்பு மற்றும் முதலீடுகள், முதலீட்டு வாய்ப்புகள், மூலதனச் சந்தை செயற்பாடுகள் மற்றும் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்வதன் அனுகூலங்கள் போன்ற பல விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .